செவ்வாய், 28 ஜனவரி, 2014

போப் ஆண்டவரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதப் பொருள் திருட்டு

போப் ஆண்டவர் 2ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதத் துண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2ம் ஜான் பால். இவரது ரத்தத்தில் நனைக்கப்பட்ட 'புனித துணித் துண்டு’ ஒன்று பெட்டியில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இது மத்திய இத்தாலியின் அப்ரூஸோவில் உள்ள சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 25ம் திகதியன்று

 தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருளை எடுத்துச் சென்று உள்ளனர். இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போது எல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.




 

சனி, 25 ஜனவரி, 2014

கடவுள் தந்த பரிசு “இன்டர்நெட்”


உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இன்டர்நெட் கடவுள் தந்த பரிசு என பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.

கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 1967ம் ஆண்டு முதல் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்நெட் என்பது கடவுளின் பரிசு, அதன் மூலம் உலகமே ஒரு குடும்பம் போல் உருவாகிறது.
ஆனால் அதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சாத்தானின் வேலை.
இவற்றை மக்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள், ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள்.

இண்டர்நெட் மூலம் ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் பிரச்சனைகள் உருவாகின்றன, இது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

9 மொழிகளில் டுவிட்டர் கணக்கை வைத்துள்ள பிரான்சிஸை, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 ஜனவரி, 2014

இயேசு என்பதன் பொருள் ...

இயேசு' என்பதற்கு "விடுதலையாக்குபவர்' என்றும் "கிறிஸ்து' என்பதற்கு "தீர்க்கதரிசி' என்றும் அர்த்தம். கிறிஸ்துவாக இயேசு ஏன் உலகில் பிறந்தார் என்பதை ஆராய வேண்டும். கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும், அவனுக்கு துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள்

ஜனத்தொகை உலகில் பெருகத் துவங்கி, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக், நோவா, சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா, ஆபிரகாம் வரை 20தலைமுறைகள் உருவாயின. 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதாமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது. மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும்,

பறவைகளையும் பலியாக கடவுளுக்குச் செலுத்தி வந்தான். ஆனாலும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி வந்தான். மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தானே மனிதனாகப் பிறந்து பாவப் பலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.

புதன், 22 ஜனவரி, 2014

இயேசு கிறிஸ்துவின் கை விரலை சேதப்படுத்திய மின்னல்

பிரேசிலில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலையின் வலது கை விரல் மின்னல் தாக்கியதால் சேதமடைந்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள கோர்கொவடோ மலை உச்சியில் 2000க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் மீட்பர் கிறிஸ்துவின் சிலை உள்ளது.

இச்சிலை உலகிலேயே 4வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும்.
இது 9.5 மீற்றர்(31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து 39.6 மீற்றர் உயரமும், 30 மீற்றர் அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும்.
இந்நிலையில் கடந்த 14ம் திகதி கிறிஸ்து சிலையின் வலது கை விரல் மின்னல் தாக்கியதால் சேதமடைந்தது.

தற்போது இதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் மின்னல் தாக்கியது, இதில் தலை மற்றும் வலது கை சேதமானது குறிப்பிடத்தக்கது.
 

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இன்று.07.14 கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்



உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.
ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள், இன்று(ஜனவரி 07ம் திகதி) கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜார்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.







 



 

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், 20.14.

2014m
அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன் http://lovithan.blogspot.ch/2014/01/2014.html 2014my2014