சனி, 14 ஜூன், 2014

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது 04ம் திகதி புதன்கிழமை ஆரம்பமானதுடன் ஒன்பது தினங்கள் ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொருப பவனியும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
 
குரு முதல்வர் அருட்தந்தை மொறாயஸ் தலைமையில் பூசைகள் நடைபெற்று இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
 
நேற்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை கலந்துகொண்டு கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இதனைத்தொடர்ந்து பல்வேறு நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்களும் வழங்கப்பட்டன.
உற்சவத்தின்போது ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆயரினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்ட பகுதியில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மேள தாளங்கள் முழங்க கொடியிறக்கும் செய்யப்பட்டது.
இறுதி உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்







 

புகைப்படங்கள்இணைப்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக