இஸ்ரேலின் கலீலீ கடற்கரைப் பகுதியில் உள்ள தேவாலய வளாகம் ஒன்றுக்கு கடந்த மாதம் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலீலீ தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமானது என்று கருதப்படுகிறது அந்த இடத்திலேயே இயேசுபிரான் சில ரொட்டித் துண்டுகள் மற்றும் மீன்களை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு
உணவளித்தார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அந்த வளாகத்தில் சேதப்படுத்த தேவாலயக் கட்டிடம் ஒன்றில் "போலிக்
கடவுகள்களின்" வழிபாட்டைக் கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஹீப்ரூ மொழியில் அந்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் அவை யூத தீவிரவாதிகளால் செய்யப்பட்டிருக்லாம் எனக்
கூறப்படுகிறது.