புதன், 21 டிசம்பர், 2016

புனித மரியாள் தேவாலயத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய நத்தார் விழா

தேசிய நத்தார்  விழா இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயத்தில் ஜனாதிபதி மைத்திhபால சிரிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பேரில் இந்த தேசிய விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு அமைவாக இரண்டு நினைவு முத்திரைகளும் வெளியிடப்படும். இந்த நிகழ்வில் கரோல் பக்தி கீதங்கள், புனித பைபிள் வாசகங்கள், அறிவுத் தேடல் நிகழ்வுகள் என்பனவும் 
இடம்பெறவுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 8 நவம்பர், 2016

கண்ணீர் சிந்தும் மாதா சிலை..யாழ் குருநகரில் ஆச்சரியத்தில் மக்கள் !

குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய 
வண்ணம் உள்ளது.
குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து இன்று மதியம் 12.30 மணி தொட க்கம் கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளதாக அப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் செபமாலை பிரார்த்தனை வழிபாடுகள் கடந்த வாரத்தில் இருந்து பற்றிமாதா ஆலயத்தில் நடைபெற்று 
வரும் நிலையில்இவ்வாறான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் குறித்த தேவாலயத்தில் மாதா கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 1 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.01.10. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  ,பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்து
யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை 
பிறக்கவில்லை, 
புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 
இனிய பிறந்த நாள் வாழ்த்து.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>












திங்கள், 12 செப்டம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி 12.09.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது மூன்றாவது .
பிறந்த நாளை 12.09.2016. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்    

அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ...... 
  ......
   வாழிய நீ பல்லாண்டு 

பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 

அந்த எல்லாம் வல்ல இறையருளோடு 

என உளமார ..... வாழ்த்துகின்றோம்  ...... 

இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா ...

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

அன்னையின் ஆவணித் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர்.
இம்முறை திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
திருநாள் திருப்பலி நிறைவில் மடுமாதா திச்செரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம் பெற்றது. 
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருவிழா கடந்த 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி. தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றதுடன் நேற்று நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இன்று மும் மொழிகளிலும் திருப்பலி
 பூஜைகள் நடை பெற்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
 மடு மாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழாவின் விரிவான நிழல் படங்கன்இணைப்பு  http://nilavarai1.blogspot.ch/2016/08/blog-post_16.html












சனி, 13 ஆகஸ்ட், 2016

இன்று முதல் மடுமாதாவின் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

மடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 29 ஜூன், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தேவாலயத்திறப்புவிழா நிகழ்வு

யாழ்  கிறிஸ்தவ தேவாலயம் புனரமைப்பின் பின்னர் திறப்புவிழா இன்று  புதன் கிழமை 29.06.2016 காலை 8.00 மணியளவில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது . விசேட ஆராதனைகளுடன் 
நடைபெற்றது  விழாவில் பாடசாலையின் பழைய மாணவர்களான திரு.திருமதி முத்துக்குமாரசாமி (கிராமசேவையாளர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






வியாழன், 23 ஜூன், 2016

தோலகட்டிசுவாமி பி. ஏ. தோமஸ் அடிகளின் நூற்றாண்டு விழா

வயாவிளான் (தோலகட்டி) சுவாமி என யாழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வணக்கத் திற்குரிய பி. ஏ. தோமஸ் அடிகளாரின் குருத்துவ நூற்றாண்டு விழா ஜனவரி மாதம் 6ஆம் திகதி நினைவுகூரப்பட்டது ((1912.01.06 – 2012.01.06). www.vayavilan.net
செபமாலை மாதா துறவற சபையின் ஸ்தாபகரான இவர் ஆசியாவிலேயே முதன் முதலாக தியானயோக சபையை நிறுவி யவர் (The Founder of the First Asian Contemplative Congregation)
இலங்கை நாட்டில் யாழ் நகரிலே பாண்டியன்தாழ்வு என்ற கிராமத்தில் வஸ்தியாம்பிள்ளை லூயிஸ் அம்மாள் என்ற தம்பதிகளுக்கு இரண்டாவது கனியாக இறைவனால் கொடுக்கப்பட்டவர். சிறந்த விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் 07.03.1886இல் பிறந்தவர். 06.01.1912ல் 
குருத்துவ திருநிலைக்கு
 உயர்த்தப்பெற்றவர். ஞான வாழ்வில் முற்றிப்பழுத்த பழமாக இறைவனால் உருவாக்கப்பட்டு 26.01.1964ல் இறைவனிடம் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.
தோமஸ் அடிகளார் கிறிஸ்தவ சமயத்தின் தவசி. அவர் ஓர் சந்நியாசி! இறைவனை முழு அன்புடன் முழு உரிமையுடனும் அப்பா, தந்தாய் என அழைத்து வாழ்ந்தவர். இறைமகன் இயேசு கிறிஸ்துவின்இதயத்திற்குள் வாழ்ந்தவர் தூய ஆவியின் இருப்பிடமானவர். அவரது கனிகளால் நிரப்பப்பட்டவர். பரிசுத்த கன்னிமரியாளின் அன்புக் குழந்தையாய் 
வாழ்ந்தவர்.
 இறைவனின் மகிமை க்காகவே வாழ்ந்தவர். “கடவுளுக்கு நிகர் யார்?” என்ற கோட்பாட்டை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். இரவும் பகலும் செபதவத்தால் இறைபிரசன்னத்தில் இயேசுவின் இதயத்தில் ஒன்றித்து இறைவனில் மறைந்து வாழ்ந்தவர்.இயேசுக்கிறிஸ்துவின் அன்பால் தூண்டப்பட்டு அவருக்காக ஓர் பைத்தியக்காரனைப்போல் வாழ்ந்தவர். 
இரவில் பல மணிநேரம் கண்விழித்து செபதவம் செய்து தன் கடமையை ஆற்றியவர். இடுப்பு முள் ஒட்டியானம், சங்கிலி, சாட்டை, தவஉடை மற்றும் தவக்கருவிகளால் தன் உடலை ஒறுத்து தவம் 
செய்தார். இந்தியா, இலங்கை மனம் திரும்பசொல்லாலும், செபத்தாலும் எழுத்தாலும், போதித்து வாழ்ந்தவர். இறுதி ஆண்டுகளில் இயேசுவின் காட்சியைப் பெற்றவர்.
ஆயர்கள், குருக்கள், துறவியர் கன்னியர்களுக்கு ஞான வழிகாட்டியாய் இருந்தவர். தினமும் பாவமன்னிப்பு வழங்க மணிக்கணக்காய் தன்னை ஒப்புக்கொடுத்தவர். குருக்கள், துறவியர், கன்னியர், குருமாணவர்கள் பொதுநிலையினருக்கு தியானம் கொடுத்தவர்.
இந்து புத்த துறவிகளின் தலைவர்களுடனும் மற்றவர்களுடனும் உரையாடி இயேசுவைப்பற்றியும் போதித்தவர். இளைஞர்களின் தந்தையாய் இருந்து இந்து, கிறிஸ்தவ மத இளைஞர்களை பாகுபாடின்றி அன்பு செய்தவர்.
மக்களில் நிலவிவரும் ஞான, சமுதாய, பொருளாதார, சீர்கேடுகளை சீர்திருத்தி நல்வழிகாட்டி போதித்தும் வாழ்ந்தவர். மனிதனுக்கு வரும் சிலுவைகளில் அவன் வாழவேண்டிய முறையைக்காட்டி இறைவனின் அன்பிலும், ஞானத்திலும், வல்லமையிலும், இரக்கத்திலும் முழு நம்பிக்கை வைத்து இயேசு மரியன்னையின் இதயங்களில் ஒன்றித்து வாழ வழிகாட்டியவர்.
நோயாளர்களை தன் செபத்தால் குணப்படுத்தியவர். பிள்ளைப்பேறு அற்றவர்களுக்கு செபத்தாலல் குழந்தை பாக்கியம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொடுத்தவர். பேய்களை இறைவனின் கரத்தால் விரட்டியவர். இளைஞர்களுக்கு பல கைத்தொழில்களும் பள்ளிப் படிப்பும் 
மறைக்கல்வியும்
 ஊட்டி, ஊண், உடை கொடுத்து அவர்களில் கிறிஸ்துவை உருவாக்கியவர். திருச்சபைத்தலைவர் உறுப்பினர்கள்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் ஐக்கிய உறவின் கருத்தை உணர்ந்தவர். மரித்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணகம் அடைய செபத்தால் உழைத்தவர்.www.vayavilan.net
தந்தை தவத்திரு தோமஸ் அடிகளார் தாழ்ச்சியின் உருவம், விசுவாசத்தின் தந்தை, நம்பிக்கையின் நங்கூரம், அன்பில் நிறைமை, ஏழ்மையின் முழுமை, தூய்மையில் வெண்மை, கீழ்ப்படிதலின் உயர் நிலை, பிறர் அன்பால் எரியும் திரி, தூய ஆவியால் நிறைந்தவர், நற்செய்தியில் சிறப்பாக 
மலைப் பொழிவை 
வாழ்ந்து காட்டிய செம்மல், நற்செய்தியை எடுத்துக்கூறிய இறைவாக்கினர்.
குலம், இனம், மொழி, இடம், பணம், கல்வி அனைத்தையும் கடந்து அனைவரிலும் இயேசு மரியன்னையை பார்த்தவர். தோழிலாளியின் நண்பன், கல், மண், மரம் வெட்டி வாழ்ந்து காட்டியவர். தலைவர்களுக்கு ஆட்சி முறையின் ஒளியாக பத்து கட்டளைகளைக் கொடுத்தவர். www.vayavilan.net
இரண்டாம் வத்திக்கான் சங்கக் கருத்துக்களை முன்னதாக 
வாழ்க்கையில் 
செயல்படுத்தியவர். கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்து அவர்களை மனம் மாற்றி கடவுளை ஏற்க செபித்து வந்தவர். இதற்காக தம் துறவிகளை செபிக்கத்தூண்டியவர். இவர் நோயாளிகளின் மருத்துவர், துன்புற்றோரின் கண்ணீரைத் துடைத்தவர். ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்து உயிர்களோடும் உரையாடி மகிழ்ந்தவர் .
ஆசியாவின் முதல் தியான யோக சபையான செபமாலைத்தாசர் சபையை இலங்கை நாட்டில் யாழ் மறைமாவட்டத்தில் வயாவிளான் தோலகட்டி என்னும் இடத்தில் 1928ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் தேதி ஆரம்பித்தார். தற்போது இலங்கையில் கொச்சிக்கடை, யாழ்ப்பாணம்,
 வவுனியா, கண்டி, 
ஆகிய இடங்களில் நான்கு ஆச்சிரமங்களும் இந்தியாவில் பதினொரு ஆச்சிரமங்களும் செப, தப, வாழ்வின் ஊற்றாகவும் இறை அருளின் வாய்க்கால்களாகவும் திகழ்கின்றன. www.vayavilan.net
இதேபோன்று செபமாலைக் கன்னியருக்கும் ஓர் துறவு சபையை 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆரம்பித்ததார். இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் இவர்களின் பணி சிறந்து விளங்குகின்றது.
அனுப்பியவர் : அமுதா (இலங்கை)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 13 ஜூன், 2016

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182 ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது.
கொழும்பு துணை ஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் இன்று காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், இன்று காலை முதல் விசேட ஆராதனைகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இன்று மாலை 5.30 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதம் வழங்கப்படவுள்ளதுடன் திருவிழா நிகழ்வுகள் நி
றைவடையவுள்ளது.
இன, மத பேதமின்றி புனித அந்தோனியாரின் ஆசி வேண்டி பல்லாயிரக்கணக்கானோர் இன்றைய திருவிழாவில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திங்கள், 23 மே, 2016

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  (தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2016.இன்று 35வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  நன்பர்கள் 
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


புதன், 2 மார்ச், 2016

நீராடச் சென்ற அருட்தந்தை நீரில் மூழ்கி மரணம்!

திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
நேற்றைய தினம் நீராடச் சென்றிருந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் என தெரியவருகின்றது.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அருட்தந்தையின் சடலம், திருகோணமலை ஆயர் இல்லத்தில் இன்று  வைக்கப்பட்டு, நாளை  புதன்கிழமை பண்டாரவளைக்கு கொண்டு செல்ல உள்ளதாக உறவினர்கள்
 தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 8 பிப்ரவரி, 2016

யாழில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது.
21ஆம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன.
இந்த வருடம் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் 
யாத்திரிகர்களும்
, இலங்கையில் இருந்து 3 ஆயிரம் யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாத்திரிகர்களுக்கான குடிநீர்இ உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்திற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் போக்குவரத்துச் சபையினரும் இணைந்து செய்கின்றார்கள். 20ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெடுந்தீவிற்கு
 புறப்படும். இந்த வாகன ஒழுங்குகள் காலை 11.30 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
படகு சேவைகள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
அத்துடன், 21ஆம் திகதி தமது இல்லங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களின் படகு சேவைகள் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெறுமென்று
 நெடுந்தீவு 
பங்குத்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் இதன்போது தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், கடற்படையினர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பங்குத் தந்தையர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>