திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நீராடச் சென்றிருந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் என தெரியவருகின்றது.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அருட்தந்தையின் சடலம், திருகோணமலை ஆயர் இல்லத்தில் இன்று வைக்கப்பட்டு, நாளை புதன்கிழமை பண்டாரவளைக்கு கொண்டு செல்ல உள்ளதாக உறவினர்கள்
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>