சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
 கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்
 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னதாக திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. 22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக் கொடி, பேராலய கிழக்குப் பகுதியிலிருந்து பாரம்பரியான பாதைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டுப் பேராலயத்தை அடைந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட 
ஆயர் எம். தேவதாஸ் 
அம்புரோஸ் தலைமையில், கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ” ஆவே மரியே மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். நாகை 
மாவட்ட ஆட்சியர்
 து. முனுசாமி, தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சஞ்சய் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். பொன்னி, காளிராஜ் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வழிபாடுகளில் பங்கேற்றனர். பேராலய அதிபர் ஏ. மைக்கேல் அடிகளார், துணை அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம்
, மேலாளர் 
தார்சீஸ்ராஜ் மற்றும் ஆரோக்கியசுந்தரம் உள்ளிட்ட உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை முன்னின்று நடத்தினர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான 
பக்தர்களும், 
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரளான அளவில் விழாவில் பங்கேற்றனர்.சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு மீட்புப் படையினர்
 கடற்கரை 
மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பேராலய ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
 இயக்கப்பட்டன.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.
 

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்


pop00
போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு, வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது

இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன், அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள்

வழங்கியுள்ளார். நான் போப் ஆண்டவராக தெரிவு செய்யப்பட்டபோது இயற்கையாகவே பிரபலமாக தொடங்கினேன், தொடக்கத்தில் அது எனக்கு ஒருவித பீதியை ஏற்படுத்தியது. 60 அண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க பிஷப்புகள் ஓய்வு பெறுவது என்பது நடைமுறையில் கேள்விப்படாத ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அது சாதாரணமாகியுள்ளது. எனக்கு முன்பு போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்த 16–ம் பெனடிக்ட், தொடர்ந்து நீண்ட நாள் பணியாற்ற முடியாது என கருதியதால் அப்பதவியில் இருந்து

ஓய்வு பெற்று அதற்கான கதவை திறந்து விட்டுள்ளார். மேலும், நான் நரம்பு கோளாறினால் மிகவும் அவதிப்படுகிறேன், அதற்காக அர்ஜென்டினாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ அணியினர் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

pop00

சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளாக மடுவிற்கு வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் மென்சின்நோர் லேனாட் டீ முருகோ, மொன்டினியோ அன்ரனியோ அமராத்தி ஆகிய அடிகளாருடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் திருவிழா திருப்பலியில் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவின் போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மறை மாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கும் பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக அன்னையின் பரிந்துரையை வேண்டி வழங்கும் ஆசியுரையை திருச்சபையின் தாய் மொழியாம் இலத்தீனில் மொழிந்தார். இத்திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதன் பின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருச்சுரூப ஆசிரும் அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து, உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், நீதிமன்ற ஒழுங்கு போன்ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருச்சுருப ஆசீர் நிறைவுற்றதும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பரிசுத்த பாப்பரசரின் கொழும்பு, மடு ஆகிய விஜயங்களின்போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூடியிருந்த மக்களுக்குத் தெரிவித்தனர். இவ்விழாவுக்கு இம்முறை நாட்டின் பலபாகங்களிலுமிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என மடு பரிபாலகர் வட்டம் தெரிவித்தது.