புதன், 29 ஜூன், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தேவாலயத்திறப்புவிழா நிகழ்வு

யாழ்  கிறிஸ்தவ தேவாலயம் புனரமைப்பின் பின்னர் திறப்புவிழா இன்று  புதன் கிழமை 29.06.2016 காலை 8.00 மணியளவில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது . விசேட ஆராதனைகளுடன் 
நடைபெற்றது  விழாவில் பாடசாலையின் பழைய மாணவர்களான திரு.திருமதி முத்துக்குமாரசாமி (கிராமசேவையாளர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






வியாழன், 23 ஜூன், 2016

தோலகட்டிசுவாமி பி. ஏ. தோமஸ் அடிகளின் நூற்றாண்டு விழா

வயாவிளான் (தோலகட்டி) சுவாமி என யாழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வணக்கத் திற்குரிய பி. ஏ. தோமஸ் அடிகளாரின் குருத்துவ நூற்றாண்டு விழா ஜனவரி மாதம் 6ஆம் திகதி நினைவுகூரப்பட்டது ((1912.01.06 – 2012.01.06). www.vayavilan.net
செபமாலை மாதா துறவற சபையின் ஸ்தாபகரான இவர் ஆசியாவிலேயே முதன் முதலாக தியானயோக சபையை நிறுவி யவர் (The Founder of the First Asian Contemplative Congregation)
இலங்கை நாட்டில் யாழ் நகரிலே பாண்டியன்தாழ்வு என்ற கிராமத்தில் வஸ்தியாம்பிள்ளை லூயிஸ் அம்மாள் என்ற தம்பதிகளுக்கு இரண்டாவது கனியாக இறைவனால் கொடுக்கப்பட்டவர். சிறந்த விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் 07.03.1886இல் பிறந்தவர். 06.01.1912ல் 
குருத்துவ திருநிலைக்கு
 உயர்த்தப்பெற்றவர். ஞான வாழ்வில் முற்றிப்பழுத்த பழமாக இறைவனால் உருவாக்கப்பட்டு 26.01.1964ல் இறைவனிடம் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.
தோமஸ் அடிகளார் கிறிஸ்தவ சமயத்தின் தவசி. அவர் ஓர் சந்நியாசி! இறைவனை முழு அன்புடன் முழு உரிமையுடனும் அப்பா, தந்தாய் என அழைத்து வாழ்ந்தவர். இறைமகன் இயேசு கிறிஸ்துவின்இதயத்திற்குள் வாழ்ந்தவர் தூய ஆவியின் இருப்பிடமானவர். அவரது கனிகளால் நிரப்பப்பட்டவர். பரிசுத்த கன்னிமரியாளின் அன்புக் குழந்தையாய் 
வாழ்ந்தவர்.
 இறைவனின் மகிமை க்காகவே வாழ்ந்தவர். “கடவுளுக்கு நிகர் யார்?” என்ற கோட்பாட்டை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். இரவும் பகலும் செபதவத்தால் இறைபிரசன்னத்தில் இயேசுவின் இதயத்தில் ஒன்றித்து இறைவனில் மறைந்து வாழ்ந்தவர்.இயேசுக்கிறிஸ்துவின் அன்பால் தூண்டப்பட்டு அவருக்காக ஓர் பைத்தியக்காரனைப்போல் வாழ்ந்தவர். 
இரவில் பல மணிநேரம் கண்விழித்து செபதவம் செய்து தன் கடமையை ஆற்றியவர். இடுப்பு முள் ஒட்டியானம், சங்கிலி, சாட்டை, தவஉடை மற்றும் தவக்கருவிகளால் தன் உடலை ஒறுத்து தவம் 
செய்தார். இந்தியா, இலங்கை மனம் திரும்பசொல்லாலும், செபத்தாலும் எழுத்தாலும், போதித்து வாழ்ந்தவர். இறுதி ஆண்டுகளில் இயேசுவின் காட்சியைப் பெற்றவர்.
ஆயர்கள், குருக்கள், துறவியர் கன்னியர்களுக்கு ஞான வழிகாட்டியாய் இருந்தவர். தினமும் பாவமன்னிப்பு வழங்க மணிக்கணக்காய் தன்னை ஒப்புக்கொடுத்தவர். குருக்கள், துறவியர், கன்னியர், குருமாணவர்கள் பொதுநிலையினருக்கு தியானம் கொடுத்தவர்.
இந்து புத்த துறவிகளின் தலைவர்களுடனும் மற்றவர்களுடனும் உரையாடி இயேசுவைப்பற்றியும் போதித்தவர். இளைஞர்களின் தந்தையாய் இருந்து இந்து, கிறிஸ்தவ மத இளைஞர்களை பாகுபாடின்றி அன்பு செய்தவர்.
மக்களில் நிலவிவரும் ஞான, சமுதாய, பொருளாதார, சீர்கேடுகளை சீர்திருத்தி நல்வழிகாட்டி போதித்தும் வாழ்ந்தவர். மனிதனுக்கு வரும் சிலுவைகளில் அவன் வாழவேண்டிய முறையைக்காட்டி இறைவனின் அன்பிலும், ஞானத்திலும், வல்லமையிலும், இரக்கத்திலும் முழு நம்பிக்கை வைத்து இயேசு மரியன்னையின் இதயங்களில் ஒன்றித்து வாழ வழிகாட்டியவர்.
நோயாளர்களை தன் செபத்தால் குணப்படுத்தியவர். பிள்ளைப்பேறு அற்றவர்களுக்கு செபத்தாலல் குழந்தை பாக்கியம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொடுத்தவர். பேய்களை இறைவனின் கரத்தால் விரட்டியவர். இளைஞர்களுக்கு பல கைத்தொழில்களும் பள்ளிப் படிப்பும் 
மறைக்கல்வியும்
 ஊட்டி, ஊண், உடை கொடுத்து அவர்களில் கிறிஸ்துவை உருவாக்கியவர். திருச்சபைத்தலைவர் உறுப்பினர்கள்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் ஐக்கிய உறவின் கருத்தை உணர்ந்தவர். மரித்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணகம் அடைய செபத்தால் உழைத்தவர்.www.vayavilan.net
தந்தை தவத்திரு தோமஸ் அடிகளார் தாழ்ச்சியின் உருவம், விசுவாசத்தின் தந்தை, நம்பிக்கையின் நங்கூரம், அன்பில் நிறைமை, ஏழ்மையின் முழுமை, தூய்மையில் வெண்மை, கீழ்ப்படிதலின் உயர் நிலை, பிறர் அன்பால் எரியும் திரி, தூய ஆவியால் நிறைந்தவர், நற்செய்தியில் சிறப்பாக 
மலைப் பொழிவை 
வாழ்ந்து காட்டிய செம்மல், நற்செய்தியை எடுத்துக்கூறிய இறைவாக்கினர்.
குலம், இனம், மொழி, இடம், பணம், கல்வி அனைத்தையும் கடந்து அனைவரிலும் இயேசு மரியன்னையை பார்த்தவர். தோழிலாளியின் நண்பன், கல், மண், மரம் வெட்டி வாழ்ந்து காட்டியவர். தலைவர்களுக்கு ஆட்சி முறையின் ஒளியாக பத்து கட்டளைகளைக் கொடுத்தவர். www.vayavilan.net
இரண்டாம் வத்திக்கான் சங்கக் கருத்துக்களை முன்னதாக 
வாழ்க்கையில் 
செயல்படுத்தியவர். கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்து அவர்களை மனம் மாற்றி கடவுளை ஏற்க செபித்து வந்தவர். இதற்காக தம் துறவிகளை செபிக்கத்தூண்டியவர். இவர் நோயாளிகளின் மருத்துவர், துன்புற்றோரின் கண்ணீரைத் துடைத்தவர். ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்து உயிர்களோடும் உரையாடி மகிழ்ந்தவர் .
ஆசியாவின் முதல் தியான யோக சபையான செபமாலைத்தாசர் சபையை இலங்கை நாட்டில் யாழ் மறைமாவட்டத்தில் வயாவிளான் தோலகட்டி என்னும் இடத்தில் 1928ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் தேதி ஆரம்பித்தார். தற்போது இலங்கையில் கொச்சிக்கடை, யாழ்ப்பாணம்,
 வவுனியா, கண்டி, 
ஆகிய இடங்களில் நான்கு ஆச்சிரமங்களும் இந்தியாவில் பதினொரு ஆச்சிரமங்களும் செப, தப, வாழ்வின் ஊற்றாகவும் இறை அருளின் வாய்க்கால்களாகவும் திகழ்கின்றன. www.vayavilan.net
இதேபோன்று செபமாலைக் கன்னியருக்கும் ஓர் துறவு சபையை 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆரம்பித்ததார். இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் இவர்களின் பணி சிறந்து விளங்குகின்றது.
அனுப்பியவர் : அமுதா (இலங்கை)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 13 ஜூன், 2016

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182 ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது.
கொழும்பு துணை ஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் இன்று காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், இன்று காலை முதல் விசேட ஆராதனைகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இன்று மாலை 5.30 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதம் வழங்கப்படவுள்ளதுடன் திருவிழா நிகழ்வுகள் நி
றைவடையவுள்ளது.
இன, மத பேதமின்றி புனித அந்தோனியாரின் ஆசி வேண்டி பல்லாயிரக்கணக்கானோர் இன்றைய திருவிழாவில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>