ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஐந்தாவது   பிறந்தநாள்.01.10. 2017. இன்று வெகுசிறப்பாக 
தனது இல்லத்தில் 
 குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
 பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  ,பல் கலைகளும் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

இன்று அன்னை தெரேசாவின் பிறந்த தினம்

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின்  புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க 
அருட்சகோதரியும்மாவார்.
உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்னை தெரேசா பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸிற்கு (அன்னை தெரசா) எட்டு வயதாயிருக்கும் போது அவரது 
தந்தை காலமானார்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ 
ஆரம்பித்தார்.
தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை 
இணைத்துக் கொண்டார்.
அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் 
முழுவதும் புகழப்பட்டார்.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் 
தொண்டாற்றியவர் இவர்.
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
தொழு நோய் மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலவாழ்வு மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை அமைத்தார் தெரசா.
இந்த தன்னலமற்ற சேவைக்காக, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, 1980ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.  1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

1983 இல் திருத்தந்தை இரண்டாம் அருளர் சின்னப்பரை உரோமாபுரியில்யில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989இல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது.
1991இல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசா 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி இறைபதமடைந்தார்.
அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது.
87வயதில் இறைவன் தன்னை அழைக்கும் வரையில் தான் அழைக்கப்பட்ட பரம ஊழியத்துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து அன்னை ஆற்றிய சேவைகளின் மகத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, அவர் மரணித்த செப்ரெம்பர் 5 ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாக பிரகடனப்படுத்தியது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 23 மே, 2017

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2017.இன்று 36வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்
உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>