ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு குடியிருக்கும் ஏராளாமான மக்களை இந்த அமைப்பினர் சமீபத்தில் கொன்று குவித்தது உலக நாடுகளை கதி கலங்க செய்துள்ளது.
தற்போது அங்கு உள்ள கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது 'ஜிஷியா' வரி கொடுக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி அல்பாக்தாதி அறிவித்து, ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தார்.
இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர்.மேலும் பலர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை பூட்டி விட்டு, பத்திரமான இடங்களுக்கு வெளியேறியதால் பல தேவாலயங்களில் வழிபாடே நடைபெறவில்லை.
இதுகுறித்து, பாக்தாத் நகரில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த ஆங்கிலிகன் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலைவரித்தாடுகிறது என்றும் இதனால் ஈராக்கில் கிறிஸ்துவ மதம் அழிந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொசூல் நகரில் இருந்த 5,000 கிறிஸ்துவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.