வியாழன், 26 டிசம்பர், 2013

சிரியா தொடர்பில் பாப்பரசர் எச்சரிக்கை

சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு, பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இடம்பெறுகின்ற மோதல்கள் சமாதானமாக நிறைவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க முற்படும் அகதிகளுக்கு எதிராக, வன்முறைகளும், பாரபட்சமும் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

புதன், 25 டிசம்பர், 2013

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்
அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம்.
உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக, கிறிஸ்துமஸ் இன்றைக்கு மாறி வருகிறது.
இறைமகன் ஏசு பிரான் அவதரித்த புண்ணியத் தலமான பெத்லகேமில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
ஏசு பிறந்த இடத்துக்குச் சென்று தொழுதனர். கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகனில், போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவுப் பிரார்த்தனை நடந்தது.







 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்


 
எமது அன்புவாசகர்அனைவர்க்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம்  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் மற்றும் கிளை
இணையங்கள்சார்பாக உள்ளம்கனிந்த
. இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.



 
 

வியாழன், 14 நவம்பர், 2013

இயேசுவின் அன்பு....ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)


 இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மனமொத்த தம்பதியாய் வாழ்வோமே!


கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.
 * திருமண ஆராதனைக்கு

ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.
 * ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.

 * ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.
 * கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து, அவருக்குப் பிரியமாக வளர்த்து அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமென்ற கரிசனை வேண்டும்.

 * தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்றாட உணவுக்காக அவ்வப்போது நன்றி சொல்வதும், வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் என்று நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.

 * ஒருவரையொருவர் அதைரியப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசவே கூடாது.
 * ஆலய ஆராதனையில் உண்மையோடு கலந்து கொள்ள வேண்டும். சபையிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 * உறவினர்களுடைய தலையீடின்றி, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
 * குடும்ப நிதிநிலவரங்களை நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இசைந்து கையாள வேண்டும்.

 * கிறிஸ்துவுக்கு தங்கள் குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய போதனைகளை சுயநலமின்றி, உண்மையோடும் அன்போடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கணவன் மனைவியே பாக்கியவான்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

குடத்தனை அன்னைவேளாங்கன்னி

 


ஆலயத்திற்கான நிதியுதவி.வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012 06:06. | அச்சிடுக | மின்-அஞ்சல் | படிப்புகள்: 431

Annaiகுடத்தனை மக்களுக்கு, கிறிஸ்துவின் அன்புக்குரியவர்களே! குடத்தனை அன்னைவேளாங்கன்னியின் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள்.
ஆலயத்தின் புணருத்தான வேலைகளுக்கு நிதியுதவிகள் தேவைப்படுவதனால் தங்களிடமிருந்து தாராள உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறோம். இறையாசி உங்களுடன் இருப்பதாக.
மேலதிக தகவல்களுக்கு
Fr.J.Elmo
Email: elmoarulnesan@yahoo.com  /  manatkadhupp@yahoo.com
Cell Nr: 0774122874  / 0213202410
மேலதிக தகவல்களுக்கு சுவிஸில்: திரு.அன்ரன்
தொலைபேசி இலக்கம்: 0041 43 710 86 48

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக மூடுமாறு !!


கேமரூன் நாட்டில் 50 தேவாலயங்கள் மட்டுமே முறையான அனுமதியினை பெற்ற போதிலும் 500 தேவாலயங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். இதற்கு பதிலளித்த பாதிரியார் குறித்த சிறுமியின் உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்விளைவாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பையே இது போன்ற நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளன என்று அதிபர் பால் பியா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சிப்பதால் தான் பியா தங்களது தேவாலயங்களை மூட நினைக்கிறார் என்று அம்மத போதகர்கள் கூறுகின்றனர்.
அதிபர் பியா ராணுவத்தின் துணையுடன் தலைநகர் யாவுண்டே, வடமேற்கு பகுதியின் தலைநகரான பமென்டா பகுதிகளில் உள்ள பெந்தெகொஸ்தே ஆலயங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். பமென்டாவில்தான் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் மற்ற எட்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை மூடும் நடவடிக்கையில் அரசு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் இத்தகைய மதகுருமார்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இவர்கள் தங்களின் அதிகாரத்தை மீறுகின்றார்கள் என்று பமென்டாவில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் மபு அந்தோணி லங் தெரிவித்துள்ளார்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மெஸ்ஸையா என்ற பெயரை சூட்ட தடைவிதித்தது அமெரிக்க!

!

அமெரிக்காவில் மெஸ்ஸையா (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான மீட்பர் இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
   
ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வருடத்தில் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு மெஸ்ஸையா என்று பெயரிடப்பட்டது. இயேசுவை, கிறிஸ்தவம் மெஸ்ஸையா என்று கூறும் அதேவேளை, யூத மதம் அதனை யூதர்களின் மீட்பர் என்ற பொருள்படப் பயன்படுத்துகிறது. மீட்பர் அல்லது விடுவிப்பவர் என்ற அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கு அகராதிகள் கூறுகின்றன.
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேவலார் அன்னையின் பெருவிழா

                                 கேவலார் அன்னையின் பெருவிழா 10.08.2013

புதன், 24 ஜூலை, 2013

முக்கிய பதவியில் ஓரினச்சேர்க்கையாளரை அமர்த்திய போப்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மதகுரு ஒருவருக்கு வத்திக்கானில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் வாராந்த சஞ்சிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
பட்டிஸ்டா றிக்கா எனும் குறித்த மதகுரு உருகுவேயிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் பணிபுரியும்போது சுவிஸ் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவ்வாறான ஒருவரை வத்திக்கானில் முக்கிய பதவியில் அமர்ததுவது அவமானம் எனவும் அச்சஞ்சிகை மேலும் சாடியுள்ளது.
இதேவேளை வேறு பலருடனும் தவறான உறவுகள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் பட்டிஸ்டாவை குறித்த பதவியில் போப் பிரான்ஸிஸே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வியாழன், 27 ஜூன், 2013

இயேசுவின் அன்பின் ஆழம்


 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில் சிக்கிய ஓட்டை படகுபோலும், நெருப்புக்குள் சிக்கிய பஞ்சைப்போலும், தன் வாழ்க்கை பயணத்தை தொடருகிறார்கள்
 என் அன்பை புரிந்து கொள்வதற்கு ஒருவருமில்லை என்று எண்ணி தன்னைத்தானே சமாதியாக்கிகொண்டு கண்ணீர் பூக்களால் அலங்கரித்துக் கொண்டும், வாழ்க்கை என்னும் எரிமலை குழம்புகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு உலகம் தரும் பதில் ஆண்கள் அழுகக்கூடாது பெண்கள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டும் என்ற நுகத்தைப்போட்டு வாழ்க்கை என்ற மாட்டுவண்டியில் போய்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கானல் நீரைப்போல வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றிலும் மாறுப்பட்ட ஒரு உண்மையான அன்பு இருக்கிறதென்பதை இந்த மானிடம் அறியவில்லை, அதை உணர்ந்தும் கொள்ளுவதுமில்லை.
தாயின் அடிவயிற்று பாசத்தைவிட தந்தையின் தோள்களை விட, உறவுகளை விட, நட்பை விட, தூய்மையான மாசற்ற அன்பு அதுதான் “இயேசுவின் அன்பு”
தாயின் கருவிலே எலும்புகள் உருவாகும் முன்னே உன்னை தெரிந்து கொண்டு, உள்ளங்கைகளில் உன்னை வரைந்து உலகம் என்னும் இருட்டிலே உன்னை நட்சத்திரமாக வைத்திருக்கிறார் இதுதான் “இயேசுவின் அன்பு”. இந்த அன்பை புரிந்துகொள்ளாமல் நீ எட்டி உதைத்த நாட்களிலும்;, கசக்கிவீசப்பட்ட காகித மலராய் அவர் அன்பை நீ தூக்கி வீசும் போதும், பாவமென்ற புதைச்சேற்றில் நீ சிக்கி மூச்சு திணறும்போதும் உன்னை நேசித்த பரம தகப்பன் அவர்.
பாவமென்ற உலக சந்தையில் நீ அடிமையாய் போனபோது, செக்குமாட்டைப்போல உன் வாழ்க்கை சுற்றிக்கொண்டு உனக்குள் அழுதுகொண்டிருக்கும் போது, என் பிள்ளையை எப்படி மீட்டெடுப்பேன் என்று தனக்குள் கதறின உள்ளம்தான் இயேசு. உன்னை மீட்டெடுக்கிறதற்கு விலைகிரயம் இருக்கும் என்பதை அறிந்து உலகம் என்ற பாவ சந்தையில் உன்பாவக்கறையைப்போக்க தன் இரத்தினால் கழுவினார். உள்ளங்கைகளில் வரைந்த உன்னை மீட்டெடுப்பதற்கு தன் உள்ளங்கைளையே கொடுத்தார். அந்த உள்ளங்கையையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்?
மனிதன் வானத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம், ஆகியவற்றை அளவிட அவனால் முடிகிறது. ஆனால் இயேசுவின் உள்ளங்கையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்? சிலர் நெருங்குகிறார்கள், சிலர் விலகுகிறார்கள், சிலர் ஏங்குகிறார்கள் ஆனால்
 இயேசு கூறியதோ:
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் .16
எனக்கன்பான சகோதரனே சகோதரியே, நீ ஏன் பாவம் என்ற நுகத்தடியோடு அடிமையைப்போல வாழவேண்டும்? ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து உனக்காக மரித்தார். அவர் உன்னை அழைக்கிறார். இன்றைக்கே அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து அவருடைய மகனாக மகளாக மாறிவிடு. அவருக்காக உன்னுடைய இருதயத்தைக் கொடு இதோ உன் வாசற்படியில் நின்று உன் இதயக்கதவைத் தட்டிக் கொன்டிருக்கிறார் அவரை வா என்று அழைத்தால் உன் வாழ்வில் வந்து உன்னை அதிசயங்களைக் கானச்செய்வார். அவரை வா என்று இப்போதே அழைப்பாயா?
ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நம் அனைவருடைய பாவங்களையும் நீக்கி நம்மை சுத்தீகரிக்கும் (1யோவான்1;7) என்று வேதம் சொல்லுகிறது
 இயேசு உன்னிடத்தில் கேட்கிறார்:
என் அன்பு குழந்தையே
 நான் எதிர்க்கவுமில்லை,
நான் பின்வாங்கவுமில்லை.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும்,
தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்;
அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
நான் இன்னும் உன்னை நேசிக்க என்ன செய்யவேண்டும்

இயேசுவின் நேசம் இன்பமானது

 
 உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது.
பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி அவருடைய சிரசிலிருந்து பாதம் வரையிலான காயங்களிலிருந்து வடிந்து வந்தது.
இயேசு இந்த பூமிக்கு ஏன் வந்தார்? கலங்கிய கண்களோடும், உடைந்த உள்ளத்தோடும் வாழும் மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி வந்தார். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,
ஏசாயா 61 :
 1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
3. சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
உன்னதப்பாட்டு 1 : 2. இயேசுவின் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது

வியாழன், 20 ஜூன், 2013

மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!



     கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!,,,,கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்
லூர்து மாதா தேவாலயத்திற்குள் 1,4m அளவிற்கு வெள்ளம் பாய்ந்த வண்ணம் உள்ளது. புனிதக் குளியல் குளிக்கும் இடம் முழுவதும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. மேலேலுயுள்ள தேவாலயம் பூட்டப்பட்டுள்ளது. கடந்த வருடமும் பாரிய வெள்ளத்திற்கு இப்பகுதியும் தேவாலயமும் சிக்கிப் பெருஞ் சேதம் ஏற்பட்டிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு இறைவன் கூட தப்ப முடியாது என்பதையே இது காட்டுகின்றது.
    

ஞாயிறு, 16 ஜூன், 2013

வங்கி நிர்வாகத்திற்கு மத குருவை நியமித்த

  
 போப்பாண்டவர் வசிக்கும் வாடிகன் நகர வங்கியானது மத சம்பந்தப்பட்ட பணிகளுக்கான நிறுவனம் என்றும் மற்றும் உலகில் ரகசியங்கள் நிறைந்ததென்றும் அறியப்பட்டபோதும் இந்த வங்கி, தற்போது பண மோசடிப் புகார்களில் சிக்கியுள்ளது.
பண மோசடிப் புகார்கள், தீவிரவாதிகளிடத்தில் முதலீடு போன்ற விஷயங்களைக் கவனித்து வரும் ஐரோப்பாவின் "மணிவல்" என்ற அமைப்பிடம் இந்த வங்கி அங்கீகாரம் பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி போப்பாண்டவர் பதவியைத் துறந்த போப் பெனடிக்ட், வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஜெர்மனியின் வக்கீலான எர்ன்ஸ்ட் வான் ஃரேபெர்க் என்பவரை நியமித்திருந்தார்.
இவருக்கு முன்னால் இப் பதவியில் இருந்தவர் பண மோசடி விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டபின் சுமார் எட்டு மாதங்கள் கழித்து நியமனம் செய்யப்பட்ட எர்ன்ஸ்ட் வங்கியின் பண விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
வங்கியின் நிர்வாகம் வளர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மணிவல் கருதியது.
புதிய போப்பான பிரான்சிஸ், தனது பதவியில் முதல் செயலாக இந்த வங்கியின் நிர்வாகப் பொறுப்பை "மோன்சிக்னோர் பட்டிஸ்டா மரியோ சல்வடோர் ரிக்கா" என்ற தனது நம்பிக்கைக்கு உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
வெளியுறவுத்துறை மந்திரி டர்சியோ பெர்டோனால் இந்த நியமனம் அறிவிக்கப்பட்ட போதிலும், போப்பின் ஆதரவு இவருக்கு பின்புலமாக இருந்துள்ளது.
வங்கியின் மதகுருவாக இவர் வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்கள் அடங்கிய குழுவிற்கு வங்கி நடவடிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கியின் பொருளாதார செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் மற்றும் நிர்வாகக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவரால் வங்கி நிர்வாகம் மேம்படும் என்று போப் பிரான்சிஸ் கருதுகின்றார்.
 

வியாழன், 2 மே, 2013

எழுந்து நில் ! விழித்துக் கொள்!


கிருஸ்துவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன பரிசு அளித்தது?
 எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ மதம் அங்கீகரித்துத்திருகிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள் , கலை ,வியாபாரம் இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஸ்துவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச் , மதம் அல்லாத இலக்கியத்தை பரவவிடுவதில்லை.
 தற்க்கால கல்வியையும் விஞ்ஞானத்தை அறிந்த ஒருவன் இன்று உண்மை கிருஸ்துவனாக இருக்க முடியுமா?  புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ, விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது.
 ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனையாளர்களான  வால்டர்,டார்வின்,புக்னர்,ப்லமேரியன், விக்டர் போன்ற பலரையும் இன்றைய கிருத்துவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.
  கிருத்துவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங்கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்த துறையும் பைபிள்க்கு சம்மந்தமானவை இல்லை.கிருத்துவ மதத்திற்கு எதிராகவும் பைபிள்க்கு மாறாகவும் ஐரோப்பா ஒவ்வொரு உயர்வையும் அடைந்தது. கிருத்துவ மதம் ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்குமானால் பாஸ்டர்,கோக் போன்ற விஞ்ஞானீகளையெல்லாம் உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்; டார்வின் போன்றோரை கழுவேற்றியிருப்பார்கள்.
  நவீன ஐரோப்பாவில் கிருத்துவம், நாகரிகம் இரண்டும் வெவ்வேறனாவை. நாகரிகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும், பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக்கின்ற  கல்வி நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கி கொள்ளவும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
  அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால், கிருத்துவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட ஒரு விநாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கபட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்.
 ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை ‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’  என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?
  கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமே!
  உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
  மீளா நரகத்தின் சித்திரவதைகளையும், அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.
  இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அதே போல்  ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.
  எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர்களும் அல்ல.

—–சுவாமி விவேகானந்தர்…..

புதன், 24 ஏப்ரல், 2013

ஒரே நாளில் 24 லட்சம் பேர்,.,


போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.
இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர்
 

மாதாவின் பாடல் காணொளி ,,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,,

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?


அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.
இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது.
போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது போப் பிரான்சிஸ் இந்த வங்கியினை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையை நிறுத்தக் கூறியுள்ளார்.
இதுதவிர, சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி சேமிப்பு பணத்தை கடனுக்குத் தருவதை தார்மீகமாக எதிர்க்கும் சட்டதரனி ஒருவரை நியமித்து அவர்மூலம் இந்தப் போக்கினை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வாடிகன் வங்கி இதுபோன்று அளித்த கடன் உதவிகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய தலைவராக இருந்த எட்டோர் கோட்டி டெடிஸ்சி( Ettore Coty tetisci) தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு


இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.

 8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார்.
வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை கவனிப்பதில் தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி முடிவெடுப்பதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை போப் நியமித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 கார்தினல்கள் இந்த குழுவில் உள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் ஒருவர்.
தற்போது அவர் மும்பை ஆர்ச் பிஷப்பாக உள்ளார். மேலும், அந்த குழுவில் வத்திக்கான் அரசு நிர்வாக தலைவர் ஜியுசெப்பே பெர்டெல்லோ, சிலே நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ சேவியர். ஜெர்மனியை சேர்ந்த ரீன்கார்டு மார்க்ஸ், காங்கோ நாட்டை சேர்ந்த லாரன்ட் மான்ஸ்வென்கோ, அமெரிக்காவை சேர்ந்த சீன் பேட்ரிக் மாலே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் பெல், ஹோன்டுராஸ் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் ஆன்ட்ரூஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வத்திக்கான் நகர கவுன்சிலின் முதல் கூட்டம் அக்டோபர் 1ம் திகதி முதல் 3ம் திகதிக்குள்ளாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


ஞாயிறு, 24 மார்ச், 2013

தாய்நாட்டின் நாளிதழ்கள் வாங்குவதை,,,


புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இம்மாதம், 18ம் தேதி, என்னை தொலைபேசியில் அழைத்த அவர், "நாளிதழை அனுப்ப வேண்டாம்” என, கூறினார்.
நான் முதலில் நம்பவில்லை. அவரைப் போல வேறு யாரோ பேசுகிறார் என, நினைத்தேன்.ஆனால், "உண்மையாகவே, போப் பிரான்சிஸ் தான், ரோமிலிருந்து பேசுகிறேன்” என, அவர் கூறினார். இதை கேட்டதும், நான் அழுது விட்டேன். என்ன சொல்வது என, தெரியவில்லை.இவ்வாறு, டேனியல் கூறினார்.

புதன், 13 மார்ச், 2013

புதிய போப் தெரிவு செய்யப்பட்டார்,,,

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ந்தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தேவாலாய மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியில் வெளியான கருப்பு புகை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று நடந்த இந்த தேர்வில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேவாலாய புகைபோக்கியிலிருந்து வந்த வெண்புகை தெரிவிக்கிறது.
பின்னர் புதிய போப் ஆண்டவர் யார் என்பது பற்றிய செய்தியை முறைப்படி வாடிகன் அரண்மனை வட்டாரங்கள் விரைவில் தெரிவிக்கும்

வெள்ளி, 8 மார்ச், 2013

மாதா பிராத்தனை,,,

மாதாவே துணை,அருள் அன்னைமாதாவின் மகிமையைக்காட்சி வெளியிடப்பட்டஅட்புதம் நிறைந்த பாடல் இது வாகும் ,,,மாதாவே துணை ,,,,,,

வெள்ளி, 1 மார்ச், 2013

விடை கொடுத்த போப்: கவலையில் மக்கள் ,,,


போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர்.
போப் நேற்றிரவு எட்டுமணிக்குத் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றதால் இனி தன் பகுதியைச் சேர்ந்தவர் போப்பாண்டவராக இல்லையே என்று ஜேர்மானியர் கவலையில் முழ்கியிருந்தனர்.
இவரது விடைபெறும் விழா பேரணியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனியில் இருந்து வாடிகன் வந்து குழுமியதாகவும் "பவேரியா தான் இன்னும் போப்பாக உள்ளது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலத்தில் நடந்துசென்றுள்ளனர் எனவும் ஊடகத்தினர் தகவல் வெளியிட்டனர்.
ஜேர்மனியின் பேராயர் ஒருவர், போப்பாண்டவரை இறையியலாளர் போப் என்றும் மிகச் சிறந்த பிரசங்கிகளில் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை ஜேர்மனியில் உள்ள அனைத்தும் தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது.
போப்பாண்டவர் இனி தான் பொதுவாழ்வில் ஈடுபடப் போவதில்லை என்றும் எஞ்சிய நாட்கள் முழுவதையும் ஜெபத்தில் மட்டும் செலவிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பதவி விலகும் போப்பாண்டவர் தனக்குப் பின் வரவேண்டியவர் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,{புகைப்படங்கள் }

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு"

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள இந்த தீவில் இருநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்காக, இராமேஸ்வரத்தில் இருந்து 81 விசைப்படகுகள் மற்றும் 33 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கிளம்பிச் சென்றனர். படகுகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் உயிர்காக்கும் சாதனங்கள் அணிவிக்கப்பட்டன. காவல்துறை மற்றும் சுங்கத்துறையினரின் பலத்த சோதனைக்கு பின்னரே அனைவரும் கச்சதீவு செல்ல அனுமதிக்கப்பட்டனர். விழாவினை யாழ்ப்பாணம் ஆயர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.( காணொளி இணைப்பு)