ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

இன்று அன்னை தெரேசாவின் பிறந்த தினம்

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின்  புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க 
அருட்சகோதரியும்மாவார்.
உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்னை தெரேசா பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸிற்கு (அன்னை தெரசா) எட்டு வயதாயிருக்கும் போது அவரது 
தந்தை காலமானார்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ 
ஆரம்பித்தார்.
தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை 
இணைத்துக் கொண்டார்.
அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் 
முழுவதும் புகழப்பட்டார்.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் 
தொண்டாற்றியவர் இவர்.
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
தொழு நோய் மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலவாழ்வு மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை அமைத்தார் தெரசா.
இந்த தன்னலமற்ற சேவைக்காக, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, 1980ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.  1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

1983 இல் திருத்தந்தை இரண்டாம் அருளர் சின்னப்பரை உரோமாபுரியில்யில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989இல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது.
1991இல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசா 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி இறைபதமடைந்தார்.
அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது.
87வயதில் இறைவன் தன்னை அழைக்கும் வரையில் தான் அழைக்கப்பட்ட பரம ஊழியத்துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து அன்னை ஆற்றிய சேவைகளின் மகத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, அவர் மரணித்த செப்ரெம்பர் 5 ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாக பிரகடனப்படுத்தியது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக