சனி, 26 டிசம்பர், 2015

ஆன்மிகப் பணியக சுக் கத்தோலிக்க ஒளிவிழா 2015

சுக் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் பதினாறாவது ஆண்டு ஒளிவிழா சுவிஷ் /சுக் /Baar என்னும் நகரில் மகிழ்ச்சியாக
நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்கள் நடாத்தும் விழாவாயினும் மத ஒன்றுமை மிளிர
எப்போதும் லுசேர்ன் துர்க்கையம்மன் ஆலய குரு
சசிதரசர்மாவின் ஆசியைப் பெற இந்த நன்மக்கள் 
தவறுவதேயில்லை.
சுக் ஆலயதலைவர் பாலசிங்கம் ஆறுமுகம் தலைமையில் சிறந்த பட்டிமன்றம்,சுக் தமிழ் பாடசாலைத் தலைவர் மாணிக்கம் ஜெயராஜ் அவர்களின் சிறப்புரை,நடனங்கள்,பாடல்கள்,கலிஸ்ரஷ் அவர்களின் இசை நிகழ்வு என்பன வற்றுடன் தமிழகத்திலிருந்து வருகைதந்த பாதிரியாரின் சிறப்புரையும்
இடம்பெற்றது.
பொது அறிவுப் போட்டியில் இந்த முறையும்
இளங்கோ முதல் பரிசு பெற்றார்.
லுசேர்ன் பெர்னாண்டோவின் இந்த அறிவுப்போட்டி சிறப்பாகவும் தொலைக்காட்சித்
தரத்துக்கும் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டுகளுக்குரியது.
ஒவ்வொரு ஆண்டும் கல்லாறு சதீஷ்அவர்களை  சிறப்புவிருந்தினராக அழைக்க இந்த நல்லோர்கள் தவறுவதேயில்லை
கல்லாறு சதீஷ்அவர்கள் மனம் திறந்த நத்தார் புதுவருட வாழ்த்துக்களை இவர்களுக்கு வழங்க ஒருபோதும் 
மறுப்பதேயில்லை.
திரு.திருமதி.றெக்‌ஷ் சுப்பிரமணியம்,திரு.திருமதி ஹில்பேட் உட்பட பல கத்தோலிக்கத் தமிழ் குடும்பங்கள் பிற நிதி ஆதரவுகளை எதிர்பாராமல் தொடர்ந்து இவ் ஒளிவிழாவினை
மத நல்லிணக்கத்துடன் நடாத்துவது மிகுந்த 
பாராட்டுக்குரியது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>