செவ்வாய், 13 மே, 2014

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,



http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/http://www.nilavarai.com/?p=2483http://navatkirirajah.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/ http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/http://www.navarkiri.com/2014/05/blog-post_8219.html



திங்கள், 12 மே, 2014

பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம்

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதியளவில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பேராயர்கள் வத்திக்கானுக்கு விஜயம் செய்து, பாப்பாண்டவரை சந்தித்திருந்தனர், இந்த விஜயத்தின் போது இலங்கை விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மடு தேவாலயத்திற்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வாரா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதேவேளை, பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்து விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கொழும்பு பேராயர் காரியாலய பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெனடிக் ஜோசப் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
 

ஞாயிறு, 4 மே, 2014

சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுக ;

ஆயர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வத்திக்கானில் வைத்து இலங்கை ஆயர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை பெரும் இனவேறுபாடு உடைய நாடு இல்லை என இதன்போது குறிப்பிட்ட அவர், ஆனால் வெவ்வேறு சமயம் மற்றும் மரபுகளை உடையது என சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி
 
செய்யும் நோக்கிலான தவறான அர்த்தங்களை ஊக்குவிக்கும் சிலரே அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மதபேதங்கள் தேசிய அமைதியை சீர்குலைக்கும் இதனால் ஆயர்கள் அமைதியான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரியுள்ளார்.