ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பாப்­ப­ரசர் நல்­லதோர் அர­சியல் தீர்­வுக்கு அழைப்பு விடுப்பார்;

 இலங்­கையின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வு வழங்க வேண்­டு ­மென்ற அழைப்­பையும் இலங்கை வரும் பாப்­ப­ரசர் விடுப்பார் என்­பதை நாம் எதிர்பார்க்­கின்றோம்.” இவ்­வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா ஆகியோர் தெரி­வித்­தனர்.
 இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீட்சி பெற வேண்டும்.
சமா­தானப் பாதையில் இலங்கை செல்ல வேண்­டு­மானால் அர­சியல் தீர்­வுக்­கான வழி­களை அரசு திறந்­து­விட வேண்டும் என்ற கோரிக்­கையை பாப்­ப­ரசர் தனது உரையில் குறிப்­பி­டுவார் என நாம் நம்­பு­கின்­றோ­மென மேலும் அவர்கள் தெரி­வித்­தார்கள்.
 பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸில் திருத்­தந்­தையின் இலங்­கைக்­கான வரு­கையை முன்­னிட்டு கருத்துத் தெரி­வித்த போதே ஆயர் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மூவரும் இவ்­வா­றான கருத்தை தெரி­வித்­தனர்.மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் தன கருத்தைத் தெரி­விக்கும் போது பாப்­பாண்­டவர் இலங்­கைக்கு வரு­வது இலங்­கையில் கட­மை­யாற்றி வரும் யோசப் வாஸ் அடி­க­ளா­ருக்கு புனி­தப்­பட்­டதை அளிப்­ப­தற்கும், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­க­வு­மாகும்.
 
பாப்­ப­ர­சரின் வருகை எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் மய­மாக்­கப்­படக் கூடாது. அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பமும் உரு­வாக்­கப்­ப­ட­மாட்­டாது. மடு­மாதா தேவா­லயம் சமா­தா­னத்தின் ஒரு­மை­ய­மாக இருந்து வரு­கி­றது. அங்கு வருகை தர­வி­ருக்கும் பாப்­ப­ரசர் வட­கி­ழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அங்கு சந்­தித்து ஆசீர்­வ­திப்­ப­தற்­கா­கவும் அவரின் வருகை அமைய இருக்­கி­றது.
 
அவ்­வே­ளையில் எல்லா மக்­களும் குடும்ப உணர்­வுடன் சகோ­தர வாஞ்­சை­யுடன் ஒன்று கூடி பாப்­ப­ர­ச­ரிடம் ஆசீர்­வாதம் பெற வேண்­டு­மென்­பதே எமது பேரா­சை­யாகும்.
 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக யுத்­தத்­தினால் நேர­டி­யாக மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த மக்­க­ளுக்கு சுபீட்­ச­மான வாழ்­வொன்று கிடைக்கப் பெற வேண்டும். எனவே, பாதிக்­கப்­பட்ட மக்கள் பாப்­ப­ர­சரை சந்­திக்­க­வி­ருப்­பது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மென்றே கூற வேண்டும். எனவே தான் அவரின் வரு­கையை அர­சியல் மயப்­ப­டுத்தக் கூடாது என எதிர்­பார்க்­கின்றோம்.
 இந்த நாட்டில் நல்­ல­தொரு அர­சியல் சூழ்­நி­லையும் சமா­தான சூழலும் உரு­வாக வேண்­டு­மானால் அர­சாங்கம் உலக நாடு­க­ளுடன் ஒத்­துப்­போக வேண்டும். போரினால் ஏற்­பட்ட வடுக்­களை இல்­லாது ஒழிக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­களின் வாழ்வில் ஒரு மீட்­சியை உரு­வாக்க வேண்­டு­மென்­பதே எமது பேரவா ஆகும்.
 திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கலா­நிதி கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தனது கருத்தை தெரி­விக்­கையில்,
கத்­தோ­லிக்க திருச்­ச­பைக்கு தலைமை வகிக்கும் திருத்­தந்தை முதலாம் பிரான்சிஸ் எமது நாட்­டுக்கு வருகை தரு­வது மாபெரும் வரப்­பி­ர­சா­த­மாகும்.
ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்­தோ­லிக்க நிறு­வ­னங்கள், ஆல­யங்கள், நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட வேளையில் கோவை நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்கள் இலங்­கையில் அளப்­ப­ரிய தொண்டு செய்­தார்கள். மக்கள் அவர்­களின் தொடு­களை ஏற்­றுக்­கொண்­டார்கள். தற்­போது புனித தந்­தை­யென்ற வகையில் அவர் இலங்கை வரு­வது எல்­லோ­ருக்கும் மகிழ்ச்சி தரும் விட­ய­மாகும்.
 யுத்­தத்­தினால் பாதிக்­க­பப்­பட்ட மக்­களை சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் அளிக்­க­வரும் அவரின் வருகை நல்­ல­தொரு மாற்­றத்தைத் தரு­மென்று நம்­பு­கின்றோம். புனித தந்தை நாட்டின் அர­சியல் தலை­வர்­களை மற்றும் சமயப் பெரி­யோர்­களை சந்­தித்து உரை­யா­ட­வுள்ளார்.
 இச்­சந்­திப்பின் போது இத­னூ­டாக நாட்டின் பிரச்­சி­னைக்கு தீர்க்­கப்­ப­டா­துள்ள சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கும் நல்ல தீர்­வொன்றை வழங்க வேண்­டு­மென்ற அழைப்­பொன்­றையும் விடுவார் என்­ப­தையும் நாம் எதிர்பார்க்­கின்றோம்.
 அவ­ரு­டைய வருகை கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ மற்றும் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் ஒரு மாபெரும் ஆசிர்­வா­த­மாக இருக்­கு­மென நாம் நம்­பு­கின்றோம் என ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை தெரி­வித்தார்.
 மட்­டக்­க­ளப்பு மறை­மா­வட்ட ஆயர் யோசப் பொன்­னையா கருத்துத் தெரி­விக்­கையில்,
 பாப்­ப­ர­சரின் வரு­கையை மிக நீண்ட கால­மா­கவே இலங்கை மக்கள் எதிர்­பார்த்த வண்ணம் இருக்­கின்­றார்கள். பாப்­ப­ர­சரின் வரு­கையின் போது மூன்று இடங்­களில் தந்தை உரை­யாற்­ற­வுள்ளார்.
 
விமான நிலை­யத்­திலும் இரண்­டா­வது அனைத்து மத சமயத் தலை­வர்­களை சந்­தி்க்­கின்ற வேளை­யிலும், காலி முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள திருப்­பலி நிறை­வேற்றும் போதும் உரை­யாற்­றுவார். அத்­துடன், மடு ஆல­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்களைக் கண்டு உரையாற்றி ஆசீர்வதிக்கப்பட உள்ளார்.
 
இவற்றுடன் ஜனாதிபதி மற்றும் பல சமயத் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுமுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு நல்ல செய்தியை பாப்பரசர் கூறுவார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பாப்பரசர் இலங்கையின் எல்லா வகைப் பிரச்சினைகளையும் நன்கு அறிவார்.
 
எனவே, இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் வர பாப்பரசர் ஆசீர்வதிப்பார் என நாம் எதிர்பார்க்கிறோமென ஆயர் பொன்னையா தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 செப்டம்பர், 2014

கத்தோலிக்க போதகருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் ஒப்புதல்

 இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
பொதுவாக முதலில் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால் புனித 23–ம் ஜானுக்கு வழங்கியது போன்று 2–வது அற்புதம் இன்றியே கியு செப்பி பாஸ்க்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிற போது கியு செப்பி பாஸ்க்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி அர்ச்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 15 செப்டம்பர், 2014

மாதா சொரூபம் இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைப்பு!

 ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை  இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை  தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இலங்கைப் பயணம் பாப்பாரசர் பிரான்சிஸ்சின் உத்தியோகபூர்வமாக அறிவித்தது ??!

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்