வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக மூடுமாறு !!


கேமரூன் நாட்டில் 50 தேவாலயங்கள் மட்டுமே முறையான அனுமதியினை பெற்ற போதிலும் 500 தேவாலயங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். இதற்கு பதிலளித்த பாதிரியார் குறித்த சிறுமியின் உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்விளைவாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பையே இது போன்ற நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளன என்று அதிபர் பால் பியா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சிப்பதால் தான் பியா தங்களது தேவாலயங்களை மூட நினைக்கிறார் என்று அம்மத போதகர்கள் கூறுகின்றனர்.
அதிபர் பியா ராணுவத்தின் துணையுடன் தலைநகர் யாவுண்டே, வடமேற்கு பகுதியின் தலைநகரான பமென்டா பகுதிகளில் உள்ள பெந்தெகொஸ்தே ஆலயங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். பமென்டாவில்தான் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் மற்ற எட்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை மூடும் நடவடிக்கையில் அரசு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் இத்தகைய மதகுருமார்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இவர்கள் தங்களின் அதிகாரத்தை மீறுகின்றார்கள் என்று பமென்டாவில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் மபு அந்தோணி லங் தெரிவித்துள்ளார்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மெஸ்ஸையா என்ற பெயரை சூட்ட தடைவிதித்தது அமெரிக்க!

!

அமெரிக்காவில் மெஸ்ஸையா (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான மீட்பர் இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
   
ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வருடத்தில் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு மெஸ்ஸையா என்று பெயரிடப்பட்டது. இயேசுவை, கிறிஸ்தவம் மெஸ்ஸையா என்று கூறும் அதேவேளை, யூத மதம் அதனை யூதர்களின் மீட்பர் என்ற பொருள்படப் பயன்படுத்துகிறது. மீட்பர் அல்லது விடுவிப்பவர் என்ற அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கு அகராதிகள் கூறுகின்றன.
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேவலார் அன்னையின் பெருவிழா

                                 கேவலார் அன்னையின் பெருவிழா 10.08.2013