இயேசுக் கிறிஸ்து அதிசய குழந்தை!! சிலுவை காயங்களுடன்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் சிலுவை காயங்களுடன் பிறந்திருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸின் குவென்சன் நகரில் கடந்த மார்ச் 15ஆம் திகதி குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் தழும்புகளுடன் பிறந்தது.
இந்த தழும்புகளை உற்று கவனித்த போது அது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த போது இருந்த தழும்புகளை ஒத்ததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தோடு குழந்தையின் நெற்றியிலும் முள், கிரீடம் வைக்கப்பட்டிருந்தது போலான தழும்பு காணப்பட்டது.
இந்த செய்தி மருத்துவமனை எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி அறிந்த கிறிஸ்தவர்கள் சிலர் இந்த குழந்தை இயேசு கிறிஸ்துவின் அடுத்த பிறவி என்று குறிப்பிட்டனர். சிறுது நேரத்தில், குவென்சென் நகரம் முழுவதும் இந்த செய்தி பரவியது.
இதனை அடுத்து, கிறிஸ்துவ நம்பிக்கையாளர்கள் பலர் ஒன்று திரண்டு, ஜெஹோமர் கேஸ்டெலியோ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய குழந்தையை வந்து பார்த்தனர்.
மேலும், 1000க் கணக்கானோர் மருத்துவமனையில் குழுமி, பூமிக்கு மீண்டும் வந்ததற்கு நன்றி என்றும், வருக ஜெஹோமர் என்றும் கூறி பிரார்த்தனைகள் செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்த அதிசயக் குழந்தை குறித்து பல கருத்துக்கள் உலவத் தொடங்கின. இந்த குழந்தை இயேசுவின் அவதாரம் என்று ஒரு சாரரும், இந்த குழந்தையை இயேசுதான் அனுப்பினார் என்றும், தன்னை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த தழும்புகளை வைத்திருப்பதாக ஒரு சாரரும் கூறினர்.இது குறித்து,மருத்துவர், மெர்லின் குரூஸ் கூறுகையில்,
குழந்தை பிறக்கும் போதே புர்புரா என்ற ஒருவகை குறைபாட்டுடன் பிறந்ததாக தெரிவித்தார்.
இந்த உடலில் உள்ள இரத்தம் ரத்த நாளங்களில் இருந்து வெளியேறி தோல் வழியாக வெளியில் தெரிவது தான் இந்த புர்புரா என்றும ஆனால் இந்த குழந்தை விஷயத்தில் அது எப்படி சரியாக, கைகள், பாதங்கள் மற்றும் நெற்றியில் சரியாக அமைந்தது என்பது விசித்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே வேளை குழந்தையை உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தெய்வீகக் குழந்தையாகவே பார்க்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>