கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.
* திருமண ஆராதனைக்கு
ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.
* ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.
* ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.
* கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து, அவருக்குப் பிரியமாக வளர்த்து அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமென்ற கரிசனை வேண்டும்.
* தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்றாட உணவுக்காக அவ்வப்போது நன்றி சொல்வதும், வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் என்று நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.
* ஒருவரையொருவர் அதைரியப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசவே கூடாது.
* ஆலய ஆராதனையில் உண்மையோடு கலந்து கொள்ள வேண்டும். சபையிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* உறவினர்களுடைய தலையீடின்றி, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
* குடும்ப நிதிநிலவரங்களை நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இசைந்து கையாள வேண்டும்.
* கிறிஸ்துவுக்கு தங்கள் குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய போதனைகளை சுயநலமின்றி, உண்மையோடும் அன்போடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கணவன் மனைவியே பாக்கியவான்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக