சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
 கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்
 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னதாக திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. 22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக் கொடி, பேராலய கிழக்குப் பகுதியிலிருந்து பாரம்பரியான பாதைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டுப் பேராலயத்தை அடைந்தது. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட 
ஆயர் எம். தேவதாஸ் 
அம்புரோஸ் தலைமையில், கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ” ஆவே மரியே மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். நாகை 
மாவட்ட ஆட்சியர்
 து. முனுசாமி, தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சஞ்சய் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். பொன்னி, காளிராஜ் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வழிபாடுகளில் பங்கேற்றனர். பேராலய அதிபர் ஏ. மைக்கேல் அடிகளார், துணை அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம்
, மேலாளர் 
தார்சீஸ்ராஜ் மற்றும் ஆரோக்கியசுந்தரம் உள்ளிட்ட உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை முன்னின்று நடத்தினர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான 
பக்தர்களும், 
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திரளான அளவில் விழாவில் பங்கேற்றனர்.சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு மீட்புப் படையினர்
 கடற்கரை 
மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். பேராலய ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
 இயக்கப்பட்டன.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக