வியாழன், 27 ஜூன், 2013

இயேசுவின் அன்பின் ஆழம்


 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில் சிக்கிய ஓட்டை படகுபோலும், நெருப்புக்குள் சிக்கிய பஞ்சைப்போலும், தன் வாழ்க்கை பயணத்தை தொடருகிறார்கள்
 என் அன்பை புரிந்து கொள்வதற்கு ஒருவருமில்லை என்று எண்ணி தன்னைத்தானே சமாதியாக்கிகொண்டு கண்ணீர் பூக்களால் அலங்கரித்துக் கொண்டும், வாழ்க்கை என்னும் எரிமலை குழம்புகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு உலகம் தரும் பதில் ஆண்கள் அழுகக்கூடாது பெண்கள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டும் என்ற நுகத்தைப்போட்டு வாழ்க்கை என்ற மாட்டுவண்டியில் போய்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கானல் நீரைப்போல வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றிலும் மாறுப்பட்ட ஒரு உண்மையான அன்பு இருக்கிறதென்பதை இந்த மானிடம் அறியவில்லை, அதை உணர்ந்தும் கொள்ளுவதுமில்லை.
தாயின் அடிவயிற்று பாசத்தைவிட தந்தையின் தோள்களை விட, உறவுகளை விட, நட்பை விட, தூய்மையான மாசற்ற அன்பு அதுதான் “இயேசுவின் அன்பு”
தாயின் கருவிலே எலும்புகள் உருவாகும் முன்னே உன்னை தெரிந்து கொண்டு, உள்ளங்கைகளில் உன்னை வரைந்து உலகம் என்னும் இருட்டிலே உன்னை நட்சத்திரமாக வைத்திருக்கிறார் இதுதான் “இயேசுவின் அன்பு”. இந்த அன்பை புரிந்துகொள்ளாமல் நீ எட்டி உதைத்த நாட்களிலும்;, கசக்கிவீசப்பட்ட காகித மலராய் அவர் அன்பை நீ தூக்கி வீசும் போதும், பாவமென்ற புதைச்சேற்றில் நீ சிக்கி மூச்சு திணறும்போதும் உன்னை நேசித்த பரம தகப்பன் அவர்.
பாவமென்ற உலக சந்தையில் நீ அடிமையாய் போனபோது, செக்குமாட்டைப்போல உன் வாழ்க்கை சுற்றிக்கொண்டு உனக்குள் அழுதுகொண்டிருக்கும் போது, என் பிள்ளையை எப்படி மீட்டெடுப்பேன் என்று தனக்குள் கதறின உள்ளம்தான் இயேசு. உன்னை மீட்டெடுக்கிறதற்கு விலைகிரயம் இருக்கும் என்பதை அறிந்து உலகம் என்ற பாவ சந்தையில் உன்பாவக்கறையைப்போக்க தன் இரத்தினால் கழுவினார். உள்ளங்கைகளில் வரைந்த உன்னை மீட்டெடுப்பதற்கு தன் உள்ளங்கைளையே கொடுத்தார். அந்த உள்ளங்கையையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்?
மனிதன் வானத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம், ஆகியவற்றை அளவிட அவனால் முடிகிறது. ஆனால் இயேசுவின் உள்ளங்கையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்? சிலர் நெருங்குகிறார்கள், சிலர் விலகுகிறார்கள், சிலர் ஏங்குகிறார்கள் ஆனால்
 இயேசு கூறியதோ:
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் .16
எனக்கன்பான சகோதரனே சகோதரியே, நீ ஏன் பாவம் என்ற நுகத்தடியோடு அடிமையைப்போல வாழவேண்டும்? ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து உனக்காக மரித்தார். அவர் உன்னை அழைக்கிறார். இன்றைக்கே அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து அவருடைய மகனாக மகளாக மாறிவிடு. அவருக்காக உன்னுடைய இருதயத்தைக் கொடு இதோ உன் வாசற்படியில் நின்று உன் இதயக்கதவைத் தட்டிக் கொன்டிருக்கிறார் அவரை வா என்று அழைத்தால் உன் வாழ்வில் வந்து உன்னை அதிசயங்களைக் கானச்செய்வார். அவரை வா என்று இப்போதே அழைப்பாயா?
ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நம் அனைவருடைய பாவங்களையும் நீக்கி நம்மை சுத்தீகரிக்கும் (1யோவான்1;7) என்று வேதம் சொல்லுகிறது
 இயேசு உன்னிடத்தில் கேட்கிறார்:
என் அன்பு குழந்தையே
 நான் எதிர்க்கவுமில்லை,
நான் பின்வாங்கவுமில்லை.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும்,
தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்;
அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
நான் இன்னும் உன்னை நேசிக்க என்ன செய்யவேண்டும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக