திங்கள், 12 மே, 2014

பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம்

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதியளவில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பேராயர்கள் வத்திக்கானுக்கு விஜயம் செய்து, பாப்பாண்டவரை சந்தித்திருந்தனர், இந்த விஜயத்தின் போது இலங்கை விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மடு தேவாலயத்திற்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வாரா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதேவேளை, பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்து விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கொழும்பு பேராயர் காரியாலய பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெனடிக் ஜோசப் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக