ஞாயிறு, 4 மே, 2014

சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுக ;

ஆயர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வத்திக்கானில் வைத்து இலங்கை ஆயர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை பெரும் இனவேறுபாடு உடைய நாடு இல்லை என இதன்போது குறிப்பிட்ட அவர், ஆனால் வெவ்வேறு சமயம் மற்றும் மரபுகளை உடையது என சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி
 
செய்யும் நோக்கிலான தவறான அர்த்தங்களை ஊக்குவிக்கும் சிலரே அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மதபேதங்கள் தேசிய அமைதியை சீர்குலைக்கும் இதனால் ஆயர்கள் அமைதியான சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக