வியாழன், 17 ஜூலை, 2014

முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம்


தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்!   
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   தமிழ் சிவில் சமூக அமையத்தினர் கடந்த ஜூலை 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியரி ந்யுகேன் வான் டாட் (Archbishop Pierre Nguyen Van Tot) ஐ சந்தித்து புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பாக கலந்துரையாடிமையோடு இவ்விடயம் தொடர்பில் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றையும் வத்திக்கான் பிரதிநிதி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் விஜயம் அரசாங்கத்தால் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி தமிழ் சிவில் சமூக அமையத்தினர் பாப்பரசரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாப்பரசரின் விஜயம் அரசுக்கு சார்பாக மாற்றப்படுவதை முறியடிப்பதற்காக பாப்பரசர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் - குறிப்பாக முடிந்தால் முள்ளிவாய்க்கால் அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் - தமிழ் சிவில் சமூக அமைய உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கும் போது தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டுமெனவும் சிவில் சமூக அமையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் இவ்வேண்டுகோளை விடுக்கவில்லை என தெளிவுபடுத்தியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையத்தினர், எனினும் பாப்பரசர் இவ்விடயங்களைப் பற்றி இலங்கை ஜனாதிபதியிடம் பேசுவது இவ்விடயங்களுக்கு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்பதாலேயே தாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றனர் எனவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக