கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182 ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது.
கொழும்பு துணை ஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் இன்று காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், இன்று காலை முதல் விசேட ஆராதனைகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இன்று மாலை 5.30 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதம் வழங்கப்படவுள்ளதுடன் திருவிழா நிகழ்வுகள் நி
றைவடையவுள்ளது.
இன, மத பேதமின்றி புனித அந்தோனியாரின் ஆசி வேண்டி பல்லாயிரக்கணக்கானோர் இன்றைய திருவிழாவில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக