ஞாயிறு, 16 ஜூன், 2013

வங்கி நிர்வாகத்திற்கு மத குருவை நியமித்த

  
 போப்பாண்டவர் வசிக்கும் வாடிகன் நகர வங்கியானது மத சம்பந்தப்பட்ட பணிகளுக்கான நிறுவனம் என்றும் மற்றும் உலகில் ரகசியங்கள் நிறைந்ததென்றும் அறியப்பட்டபோதும் இந்த வங்கி, தற்போது பண மோசடிப் புகார்களில் சிக்கியுள்ளது.
பண மோசடிப் புகார்கள், தீவிரவாதிகளிடத்தில் முதலீடு போன்ற விஷயங்களைக் கவனித்து வரும் ஐரோப்பாவின் "மணிவல்" என்ற அமைப்பிடம் இந்த வங்கி அங்கீகாரம் பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி போப்பாண்டவர் பதவியைத் துறந்த போப் பெனடிக்ட், வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஜெர்மனியின் வக்கீலான எர்ன்ஸ்ட் வான் ஃரேபெர்க் என்பவரை நியமித்திருந்தார்.
இவருக்கு முன்னால் இப் பதவியில் இருந்தவர் பண மோசடி விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டபின் சுமார் எட்டு மாதங்கள் கழித்து நியமனம் செய்யப்பட்ட எர்ன்ஸ்ட் வங்கியின் பண விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
வங்கியின் நிர்வாகம் வளர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மணிவல் கருதியது.
புதிய போப்பான பிரான்சிஸ், தனது பதவியில் முதல் செயலாக இந்த வங்கியின் நிர்வாகப் பொறுப்பை "மோன்சிக்னோர் பட்டிஸ்டா மரியோ சல்வடோர் ரிக்கா" என்ற தனது நம்பிக்கைக்கு உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
வெளியுறவுத்துறை மந்திரி டர்சியோ பெர்டோனால் இந்த நியமனம் அறிவிக்கப்பட்ட போதிலும், போப்பின் ஆதரவு இவருக்கு பின்புலமாக இருந்துள்ளது.
வங்கியின் மதகுருவாக இவர் வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்கள் அடங்கிய குழுவிற்கு வங்கி நடவடிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கியின் பொருளாதார செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் மற்றும் நிர்வாகக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவரால் வங்கி நிர்வாகம் மேம்படும் என்று போப் பிரான்சிஸ் கருதுகின்றார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக