சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர்.
அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன் சாலையில் போப் வருவதை பார்த்தவுடன் அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்ததை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார்.
மேலும், அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார்.
மாபியா கும்பலால் போப்பிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளபோதும், அதைப் பொருட்படுத்தாமல் எவ்வித பயமுமின்றி போப், சாலையோரம் நின்றிருந்த அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மற்றைய செய்திகள்.புகைப்படங்கள்.
மற்றைய செய்திகள்.புகைப்படங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக