சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  முன்னதாக திருக்கொடி...

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு, வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில்...

சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின்...