இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
பொதுவாக முதலில் முக்திப்பேறு அளிப்பதற்கு ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். புனிதர் பட்டம் வழங்குவதற்கு மேலும் ஒரு அற்புதம் செய்திருக்க வேண்டும். இந்த அற்புதங்களை அங்கீகரித்து போப் ஆண்டவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறை.
ஆனால் புனித 23–ம் ஜானுக்கு வழங்கியது போன்று 2–வது அற்புதம் இன்றியே கியு செப்பி பாஸ்க்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புதல் வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிற போது கியு செப்பி பாஸ்க்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி அர்ச்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக