ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இளம் ஜோடிகளுக்கு போப் தரும் காதல் டிப்ஸ்(காணோளி, )

வாடிகனில் போப் பிரான்ஸிஸ் காதலர் தினத்தை முன்னிட்டு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
உலகெங்கும் நேற்று முன் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட காதலர் தினம் வாடிகனிலும் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.

இதனையொட்டி புனித பீட்டர் சதுக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட இளம் ஜோடிகளுக்கு போப் பிரான்சிஸ் சிறப்பு தரிசனம் அளித்தார்.
இந்நிலையில் அன்றைய தினத்தை முன்னிட்டு போப் பிரான்ஸிஸ் மணவாழ்வை மகிழ்ச்சியுடன் நடத்துவதற்கு பல்வேறு அறிவுறைகளை வழங்கினார்.

· ப்ளீஸ், சாரி, தாங்க்ஸ் ஆகிய வார்த்தைகளை தாரகமந்திரமாக பயன்படுத்த வேண்டும்.
· ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மனதில் அமைதியை ஏற்படுத்தாமல் படுக்கைக்குச் செல்லக்கூடாது .ஏனெனில் அது மன இறுக்கத்திற்கும், தளர்விற்கும் வழிவகுப்பது மட்டுமல்லாமல் அடுத்த நாளும் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கும்.

· குற்றமில்லாத குடும்பம் ஒன்றும் இல்லை என்பதால் குற்றம் காண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேலும் போபிற்கு புனித பீட்டர் சதுக்கத்தில் அமோக வறவேற்பு கிடைத்ததால் உள் அரங்கத்தில் நடத்தப்படவிருந்த இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என வாட்டிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக