வாடிகனில் நடந்த புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டுள்ளார்.
உலகமெங்கும் இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது(இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாள்).
சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார்.
தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.
புனித வெள்ளிக்கு முந்தைய நாளை புனித வியாழன் ஆக கிறிஸ்தவர்களை கடை பிடித்து வழிபாடு செய்கின்றனர்.
இதனையடுத்து நேற்று புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சி வாடிகன் நகரில் நடந்தது.
அதில் போப் ஆண்டவர் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார், அப்போது எண்ணையை புனிதப் படுத்தும் சடங்கு நடந்தது.
அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.
அப்போது போப் ஆண்டவர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என கூறினார்.
மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மையத்ததுக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார்.
அவ்வாறு கால்களை கழுவியவர்கள் 16 முதல் 86 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 4 பேர் பெண்கள், 75 வயது ஹமீது என்ற முஸ்லீம் நபர் ஒருவர்.
இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.
அப்போது 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார்.
ஆனால், புதிய போப் ஆண்டவராக பதவியேற்றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மையத்துக்கு சென்றுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக