பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 


