திங்கள், 26 ஜனவரி, 2015

தமிழர் முன்னேற்றக் கழக பிரதிநிதிகள் ஆயர் சந்திப்பு.!!

தமிழர் முன்னேற்றக் கழகம் கடந்த 2015-01-21ந் திகதியன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துகுரிய இராஜப்பு ஜோசப் அவர்களுடன் தமிழ் மக்களின் கலை, கலாசார, அரசியல் இமற்றும் வாழ்வாதார உரிமைகள் பற்றிய கலந்துரையாடலொன்றை மேற்க்கொண்டிருந்தது. குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளர் வி.ஜனகனால் ஆயருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும்...

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பாப்பரசர் சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு!

இலங்­கைக்கு நேற்று வந்­த­டைந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்தை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்டபத்தில் இலங்­கையின் சர்­வ­மத தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலை­வர்கள் பாப்­ப­ர­ச­ரு­ட­னான இந்த சந்­திப்பில் கலந்­து­ கொண்­டனர். மாநாட்டு மண்­ட­பத்­துக்கு வந்த பாப்­ப­ர­சரை மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு அழைத்துச் சென்றார். பாப்­ப­ர­ச­ருக்கு...

செவ்வாய், 13 ஜனவரி, 2015

மடுத் திருத்தலத்தில் பாப்பரசரைத் தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார். பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர். இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து விமானப் படையின் ஹெலிகொப்டரில் மடுத் திருத்தலத்துக்கு வரும் பாப்பரசர் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மடுமாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்குகொண்டு  மக்களுக்கு...

வியாழன், 1 ஜனவரி, 2015

மலரும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2015

 களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இணைய வாழ்த்துக்கள் 1.01.2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது. மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர். நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி...