புதன், 21 டிசம்பர், 2016

புனித மரியாள் தேவாலயத்தில் ஜனாதிபதி தலைமையில் தேசிய நத்தார் விழா

தேசிய நத்தார்  விழா இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள புனித மரியாள் தேவாலயத்தில் ஜனாதிபதி மைத்திhபால சிரிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பேரில் இந்த தேசிய விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு அமைவாக இரண்டு நினைவு முத்திரைகளும்...

செவ்வாய், 8 நவம்பர், 2016

கண்ணீர் சிந்தும் மாதா சிலை..யாழ் குருநகரில் ஆச்சரியத்தில் மக்கள் !

குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய  வண்ணம் உள்ளது. குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து இன்று மதியம் 12.30 மணி தொட க்கம் கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளதாக அப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தின் செபமாலை பிரார்த்தனை வழிபாடுகள் கடந்த வாரத்தில் இருந்து பற்றிமாதா ஆலயத்தில் நடைபெற்று  வரும் நிலையில்இவ்வாறான அதிசய சம்பவம்...

சனி, 1 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் நான்காவது  பிறந்தநாள்.01.10. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார்...

திங்கள், 12 செப்டம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி 12.09.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது மூன்றாவது . பிறந்த நாளை 12.09.2016. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்  மாமாமார் மாமி மார் மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்....

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

அன்னையின் ஆவணித் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர். இம்முறை திருவிழாவில்...

சனி, 13 ஆகஸ்ட், 2016

இன்று முதல் மடுமாதாவின் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

மடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில்...

புதன், 29 ஜூன், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தேவாலயத்திறப்புவிழா நிகழ்வு

யாழ்  கிறிஸ்தவ தேவாலயம் புனரமைப்பின் பின்னர் திறப்புவிழா இன்று  புதன் கிழமை 29.06.2016 காலை 8.00 மணியளவில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது . விசேட ஆராதனைகளுடன்  நடைபெற்றது  விழாவில் பாடசாலையின் பழைய மாணவர்களான திரு.திருமதி முத்துக்குமாரசாமி (கிராமசேவையாளர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வியாழன், 23 ஜூன், 2016

தோலகட்டிசுவாமி பி. ஏ. தோமஸ் அடிகளின் நூற்றாண்டு விழா

வயாவிளான் (தோலகட்டி) சுவாமி என யாழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வணக்கத் திற்குரிய பி. ஏ. தோமஸ் அடிகளாரின் குருத்துவ நூற்றாண்டு விழா ஜனவரி மாதம் 6ஆம் திகதி நினைவுகூரப்பட்டது ((1912.01.06 – 2012.01.06). www.vayavilan.net செபமாலை மாதா துறவற சபையின் ஸ்தாபகரான இவர் ஆசியாவிலேயே முதன் முதலாக தியானயோக சபையை நிறுவி யவர் (The Founder of the First Asian Contemplative Congregation) இலங்கை நாட்டில் யாழ் நகரிலே பாண்டியன்தாழ்வு என்ற கிராமத்தில் வஸ்தியாம்பிள்ளை...

திங்கள், 13 ஜூன், 2016

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 182 ஆவது வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது. கொழும்பு துணை ஆயர் வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையினால் இன்று காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்,...

திங்கள், 23 மே, 2016

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  (தேவன் தர்மா)..தம்பதியினரின்  திருமண நாள் 23-05-2016.இன்று 35வது வருட திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  நன்பர்கள்  வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. .கொம்  நிலாவரை...

புதன், 2 மார்ச், 2016

நீராடச் சென்ற அருட்தந்தை நீரில் மூழ்கி மரணம்!

திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்றைய தினம் நீராடச் சென்றிருந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் என தெரியவருகின்றது. சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை...

திங்கள், 8 பிப்ரவரி, 2016

யாழில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ஆம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத்...