வியாழன், 14 நவம்பர், 2013

இயேசுவின் அன்பு....ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)


 இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.

நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மனமொத்த தம்பதியாய் வாழ்வோமே!


கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.
 * திருமண ஆராதனைக்கு

ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.
 * ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.

 * ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.
 * கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து, அவருக்குப் பிரியமாக வளர்த்து அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டுமென்ற கரிசனை வேண்டும்.

 * தங்களுக்கு கொடுக்கப்பட்ட அன்றாட உணவுக்காக அவ்வப்போது நன்றி சொல்வதும், வேதவாசிப்பிற்கும் ஜெபத்திற்கும் என்று நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும்.

 * ஒருவரையொருவர் அதைரியப்படுத்துகிற வார்த்தைகளைப் பேசவே கூடாது.
 * ஆலய ஆராதனையில் உண்மையோடு கலந்து கொள்ள வேண்டும். சபையிலும், கிறிஸ்துவின் ராஜ்யத்தின் விரிவாக்கப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 * உறவினர்களுடைய தலையீடின்றி, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
 * குடும்ப நிதிநிலவரங்களை நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இசைந்து கையாள வேண்டும்.

 * கிறிஸ்துவுக்கு தங்கள் குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும். அவருடைய போதனைகளை சுயநலமின்றி, உண்மையோடும் அன்போடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கணவன் மனைவியே பாக்கியவான்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

குடத்தனை அன்னைவேளாங்கன்னி

 


ஆலயத்திற்கான நிதியுதவி.வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012 06:06. | அச்சிடுக | மின்-அஞ்சல் | படிப்புகள்: 431

Annaiகுடத்தனை மக்களுக்கு, கிறிஸ்துவின் அன்புக்குரியவர்களே! குடத்தனை அன்னைவேளாங்கன்னியின் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள்.
ஆலயத்தின் புணருத்தான வேலைகளுக்கு நிதியுதவிகள் தேவைப்படுவதனால் தங்களிடமிருந்து தாராள உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறோம். இறையாசி உங்களுடன் இருப்பதாக.
மேலதிக தகவல்களுக்கு
Fr.J.Elmo
Email: elmoarulnesan@yahoo.com  /  manatkadhupp@yahoo.com
Cell Nr: 0774122874  / 0213202410
மேலதிக தகவல்களுக்கு சுவிஸில்: திரு.அன்ரன்
தொலைபேசி இலக்கம்: 0041 43 710 86 48

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக மூடுமாறு !!


கேமரூன் நாட்டில் 50 தேவாலயங்கள் மட்டுமே முறையான அனுமதியினை பெற்ற போதிலும் 500 தேவாலயங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். இதற்கு பதிலளித்த பாதிரியார் குறித்த சிறுமியின் உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்விளைவாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பையே இது போன்ற நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளன என்று அதிபர் பால் பியா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சிப்பதால் தான் பியா தங்களது தேவாலயங்களை மூட நினைக்கிறார் என்று அம்மத போதகர்கள் கூறுகின்றனர்.
அதிபர் பியா ராணுவத்தின் துணையுடன் தலைநகர் யாவுண்டே, வடமேற்கு பகுதியின் தலைநகரான பமென்டா பகுதிகளில் உள்ள பெந்தெகொஸ்தே ஆலயங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். பமென்டாவில்தான் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் மற்ற எட்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை மூடும் நடவடிக்கையில் அரசு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் இத்தகைய மதகுருமார்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இவர்கள் தங்களின் அதிகாரத்தை மீறுகின்றார்கள் என்று பமென்டாவில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் மபு அந்தோணி லங் தெரிவித்துள்ளார்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மெஸ்ஸையா என்ற பெயரை சூட்ட தடைவிதித்தது அமெரிக்க!

!

அமெரிக்காவில் மெஸ்ஸையா (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான மீட்பர் இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
   
ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வருடத்தில் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு மெஸ்ஸையா என்று பெயரிடப்பட்டது. இயேசுவை, கிறிஸ்தவம் மெஸ்ஸையா என்று கூறும் அதேவேளை, யூத மதம் அதனை யூதர்களின் மீட்பர் என்ற பொருள்படப் பயன்படுத்துகிறது. மீட்பர் அல்லது விடுவிப்பவர் என்ற அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கு அகராதிகள் கூறுகின்றன.
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேவலார் அன்னையின் பெருவிழா

                                 கேவலார் அன்னையின் பெருவிழா 10.08.2013

புதன், 24 ஜூலை, 2013

முக்கிய பதவியில் ஓரினச்சேர்க்கையாளரை அமர்த்திய போப்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மதகுரு ஒருவருக்கு வத்திக்கானில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் வாராந்த சஞ்சிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
பட்டிஸ்டா றிக்கா எனும் குறித்த மதகுரு உருகுவேயிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் பணிபுரியும்போது சுவிஸ் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவ்வாறான ஒருவரை வத்திக்கானில் முக்கிய பதவியில் அமர்ததுவது அவமானம் எனவும் அச்சஞ்சிகை மேலும் சாடியுள்ளது.
இதேவேளை வேறு பலருடனும் தவறான உறவுகள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் பட்டிஸ்டாவை குறித்த பதவியில் போப் பிரான்ஸிஸே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.