போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர்.
போப் நேற்றிரவு எட்டுமணிக்குத் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றதால் இனி தன் பகுதியைச் சேர்ந்தவர் போப்பாண்டவராக இல்லையே என்று ஜேர்மானியர் கவலையில் முழ்கியிருந்தனர்.
இவரது விடைபெறும் விழா பேரணியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனியில் இருந்து வாடிகன் வந்து குழுமியதாகவும் "பவேரியா தான் இன்னும் போப்பாக உள்ளது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலத்தில் நடந்துசென்றுள்ளனர் எனவும் ஊடகத்தினர் தகவல் வெளியிட்டனர்.
ஜேர்மனியின் பேராயர் ஒருவர், போப்பாண்டவரை இறையியலாளர் போப் என்றும் மிகச் சிறந்த பிரசங்கிகளில் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை ஜேர்மனியில் உள்ள அனைத்தும் தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது.
போப்பாண்டவர் இனி தான் பொதுவாழ்வில் ஈடுபடப் போவதில்லை என்றும் எஞ்சிய நாட்கள் முழுவதையும் ஜெபத்தில் மட்டும் செலவிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பதவி விலகும் போப்பாண்டவர் தனக்குப் பின் வரவேண்டியவர் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,{புகைப்படங்கள் }
0 கருத்துகள்:
கருத்துரையிடுக