புதன், 13 மார்ச், 2013

புதிய போப் தெரிவு செய்யப்பட்டார்,,,

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ந்தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தேவாலாய மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியில் வெளியான கருப்பு புகை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று நடந்த இந்த தேர்வில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேவாலாய புகைபோக்கியிலிருந்து வந்த வெண்புகை தெரிவிக்கிறது.
பின்னர் புதிய போப் ஆண்டவர் யார் என்பது பற்றிய செய்தியை முறைப்படி வாடிகன் அரண்மனை வட்டாரங்கள் விரைவில் தெரிவிக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக