ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு


இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.

 8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார்.
வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை கவனிப்பதில் தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி முடிவெடுப்பதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை போப் நியமித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 கார்தினல்கள் இந்த குழுவில் உள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் ஒருவர்.
தற்போது அவர் மும்பை ஆர்ச் பிஷப்பாக உள்ளார். மேலும், அந்த குழுவில் வத்திக்கான் அரசு நிர்வாக தலைவர் ஜியுசெப்பே பெர்டெல்லோ, சிலே நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ சேவியர். ஜெர்மனியை சேர்ந்த ரீன்கார்டு மார்க்ஸ், காங்கோ நாட்டை சேர்ந்த லாரன்ட் மான்ஸ்வென்கோ, அமெரிக்காவை சேர்ந்த சீன் பேட்ரிக் மாலே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் பெல், ஹோன்டுராஸ் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் ஆன்ட்ரூஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வத்திக்கான் நகர கவுன்சிலின் முதல் கூட்டம் அக்டோபர் 1ம் திகதி முதல் 3ம் திகதிக்குள்ளாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக