அமெரிக்காவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் தனது திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக கூடினர்.
தன்னை பார்க்க வந்த குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வாங்கி, அவர் அன்புடன் கொஞ்சினார்.
அங்குள்ள அரசியல்சாசன வீதியில் வரும்போது, போப் ஆண்டவரை 5 வயது சிறுமி ஒருவள் நெருங்கி சென்றபோது, பாதுகாவலர்கள் தடுத்தனர். ஆனால் அந்த சிறுமியை அவர் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார்.
அவர்கள் அழைத்து சென்றபோது, அவர் அந்த குழந்தையை அரவணைத்து, கொஞ்சி முத்தமிட்டார். அப்போது அந்த சிறுமி தன் வசமிருந்த ஒரு கடிதத்தை போப் ஆண்டவரிடம் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சிறுமியின் பெயர் சோபியா குரூஸ். மெக்சிகோ பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்தவள்.
அவள் போப் ஆண்டவரிடம் அளித்த கடிதத்தில், ‘‘என் தந்தையை போன்றவர்கள் உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கி இருக்கலாம். ஆனால் அனைவரும் அமெரிக்காவுக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு தகுதி படைத்தவர்கள். அவர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கு உரியவர்கள். அவர்கள் குடியுரிமை சீர்திருத்தம் பெற வேண்டியவர்கள். இதற்கு நீங்கள் உதவ வேண்டும். ஆதரவு தர வேண்டும்’’ என கூறி இருக்கிறாள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக