அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின் புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக்
கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும்மாவார்.
உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்னை தெரேசா பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸிற்கு (அன்னை தெரசா) எட்டு வயதாயிருக்கும் போது அவரது தந்தை காலமானார்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ ஆரம்பித்தார்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக