புதன், 2 மார்ச், 2016

நீராடச் சென்ற அருட்தந்தை நீரில் மூழ்கி மரணம்!

திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
நேற்றைய தினம் நீராடச் சென்றிருந்த அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் என தெரியவருகின்றது.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அருட்தந்தையின் சடலம், திருகோணமலை ஆயர் இல்லத்தில் இன்று  வைக்கப்பட்டு, நாளை  புதன்கிழமை பண்டாரவளைக்கு கொண்டு செல்ல உள்ளதாக உறவினர்கள்
 தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 8 பிப்ரவரி, 2016

யாழில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது.
21ஆம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன.
இந்த வருடம் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் 
யாத்திரிகர்களும்
, இலங்கையில் இருந்து 3 ஆயிரம் யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாத்திரிகர்களுக்கான குடிநீர்இ உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்திற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் போக்குவரத்துச் சபையினரும் இணைந்து செய்கின்றார்கள். 20ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெடுந்தீவிற்கு
 புறப்படும். இந்த வாகன ஒழுங்குகள் காலை 11.30 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
படகு சேவைகள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
அத்துடன், 21ஆம் திகதி தமது இல்லங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களின் படகு சேவைகள் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெறுமென்று
 நெடுந்தீவு 
பங்குத்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் இதன்போது தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், கடற்படையினர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பங்குத் தந்தையர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




வெள்ளி, 1 ஜனவரி, 2016

அனை வருக்கும் இனிய புத்தாண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2016

அனைத்து அன்பு உறவுகள்  இணைப் பார்வையாளருக்கும் மலரும் புத்தாண்டில் இந்த இணையங்களின் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். பழைய விடயங்களை விடுத்தது புதிய எண்ணங்கள் உருவெடுக்கும் நேரமாகும். அந்த வகையில் நாம் அனைவரும் புது வருடத்தை வரவேற்க்க தயாராகி கொண்டிருக்கிறோம்.
புத்தாண்டை கொண்டாட மக்கள் அனைவரும் பெரிய அரங்கங்களும், ஹோடேல்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் அரங்கேற்ற தொடங்கி உள்ளன.
அவ்வகையில் இசை கலைஞர்களும் தங்கள் பங்கிற்கு புது வருடத்திற்கு உற்சாக வரவேற்பளிக்க இன்னிசை பாடல்களை 
அளித்துவருகின்றனர்  
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அனை வரையும் வாழ்தி நிற்கிறது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் 
 வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்   
 வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 26 டிசம்பர், 2015

ஆன்மிகப் பணியக சுக் கத்தோலிக்க ஒளிவிழா 2015

சுக் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் பதினாறாவது ஆண்டு ஒளிவிழா சுவிஷ் /சுக் /Baar என்னும் நகரில் மகிழ்ச்சியாக
நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்கள் நடாத்தும் விழாவாயினும் மத ஒன்றுமை மிளிர
எப்போதும் லுசேர்ன் துர்க்கையம்மன் ஆலய குரு
சசிதரசர்மாவின் ஆசியைப் பெற இந்த நன்மக்கள் 
தவறுவதேயில்லை.
சுக் ஆலயதலைவர் பாலசிங்கம் ஆறுமுகம் தலைமையில் சிறந்த பட்டிமன்றம்,சுக் தமிழ் பாடசாலைத் தலைவர் மாணிக்கம் ஜெயராஜ் அவர்களின் சிறப்புரை,நடனங்கள்,பாடல்கள்,கலிஸ்ரஷ் அவர்களின் இசை நிகழ்வு என்பன வற்றுடன் தமிழகத்திலிருந்து வருகைதந்த பாதிரியாரின் சிறப்புரையும்
இடம்பெற்றது.
பொது அறிவுப் போட்டியில் இந்த முறையும்
இளங்கோ முதல் பரிசு பெற்றார்.
லுசேர்ன் பெர்னாண்டோவின் இந்த அறிவுப்போட்டி சிறப்பாகவும் தொலைக்காட்சித்
தரத்துக்கும் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டுகளுக்குரியது.
ஒவ்வொரு ஆண்டும் கல்லாறு சதீஷ்அவர்களை  சிறப்புவிருந்தினராக அழைக்க இந்த நல்லோர்கள் தவறுவதேயில்லை
கல்லாறு சதீஷ்அவர்கள் மனம் திறந்த நத்தார் புதுவருட வாழ்த்துக்களை இவர்களுக்கு வழங்க ஒருபோதும் 
மறுப்பதேயில்லை.
திரு.திருமதி.றெக்‌ஷ் சுப்பிரமணியம்,திரு.திருமதி ஹில்பேட் உட்பட பல கத்தோலிக்கத் தமிழ் குடும்பங்கள் பிற நிதி ஆதரவுகளை எதிர்பாராமல் தொடர்ந்து இவ் ஒளிவிழாவினை
மத நல்லிணக்கத்துடன் நடாத்துவது மிகுந்த 
பாராட்டுக்குரியது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 23 அக்டோபர், 2015

இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணைஅதிசயம்!!!

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது.
நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் உள்ள அருட்சகோதரி ஒருவர் குறித்த நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறியுள்ளதை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த அருட்சகோதரி விடயம் தொடர்பாக பரப்பாங்கண்டல் பங்கு தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணை தற்பொழுது பங்கு தந்தையின் வாசஸ்தலத்தில் 
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் பொது மக்களுக்கு தெரிந்ததை அடுத்து இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அப்பகுதிக்கு சென்று இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணையை பார்வையிட்டு பயபக்தியோடு வழிபடுபதை காணக்கூடியதாக உள்ளது.
நற்கருணை மாற்றம் பெற்று இரத்தமும் சதையுமாக மாறி மனிதனின் இதயம் போலவும் அதற்கு அருகில் குழந்தையின் உருவம் போலவும், மேலும் அன்னை மரியாவின் உருவம் போலவும் காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
..............

வியாழன், 24 செப்டம்பர், 2015

மக்கள் சந்திப்பில் பரபரப்பு போப் ஆண்டவரிடம் கடிதம் கொடுத்த சிறுமி

அமெரிக்காவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் தனது திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக கூடினர்.

தன்னை பார்க்க வந்த குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வாங்கி, அவர் அன்புடன் கொஞ்சினார்.

அங்குள்ள அரசியல்சாசன வீதியில் வரும்போது, போப் ஆண்டவரை 5 வயது சிறுமி ஒருவள் நெருங்கி சென்றபோது, பாதுகாவலர்கள் தடுத்தனர். ஆனால் அந்த சிறுமியை அவர் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார்.

அவர்கள் அழைத்து சென்றபோது, அவர் அந்த குழந்தையை அரவணைத்து, கொஞ்சி முத்தமிட்டார். அப்போது அந்த சிறுமி தன் வசமிருந்த ஒரு கடிதத்தை போப் ஆண்டவரிடம் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சிறுமியின் பெயர் சோபியா குரூஸ். மெக்சிகோ பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்தவள்.

அவள் போப் ஆண்டவரிடம் அளித்த கடிதத்தில், ‘‘என் தந்தையை போன்றவர்கள் உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கி இருக்கலாம். ஆனால் அனைவரும் அமெரிக்காவுக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு தகுதி படைத்தவர்கள். அவர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கு உரியவர்கள். அவர்கள் குடியுரிமை சீர்திருத்தம் பெற வேண்டியவர்கள். இதற்கு நீங்கள் உதவ வேண்டும். ஆதரவு தர வேண்டும்’’ என கூறி இருக்கிறாள்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 27 ஆகஸ்ட், 2015

இன்று அன்னை தெரேசாவிற்கு பிறந்த தினம்

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின்  புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் 
கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும்மாவார்.
உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்னை தெரேசா பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸிற்கு (அன்னை தெரசா) எட்டு வயதாயிருக்கும் போது அவரது தந்தை காலமானார்.
ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ ஆரம்பித்தார்..