
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில்...