ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் -

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள்...

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மன்னார் ஆயர் வடமாகாணசபை தொடர்பில் அதிருப்தி!

பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார். மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள்...

புனித பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸ் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு!!

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார். இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பாப்பரசரின்...

புதன், 1 அக்டோபர், 2014

பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் மகிந்த!

மகிந்த ராஜபக்சே  இந்த மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் பயணம் ஒன்றை  செய்யவுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார் என முன்னதாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பின்னர்...