செவ்வாய், 7 அக்டோபர், 2014

மன்னார் ஆயர் வடமாகாணசபை தொடர்பில் அதிருப்தி!

பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள் காணியற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களின் நிலை குறித்து தாம் விரிவாக முதலமைச்சருடன் பேசியதாக ஆயர் கூறினார்.
அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவேண்டும் என்று தாம் அவரிடம் கோரியதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.
எனினும் சுமார் ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் வடமாகாணசபை தொடர்பிலான மக்களது கவலைகளையே ஆயர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக