ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் -

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள் முறையாக செயல்படாமை இதற்கு காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் நமது நாட்டிற்கு ஆபத்தாகிவரும் வேளையில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. நாம் ஆயுத ரீதியாக புலிகளை அழித்திருந்தாலும் சர்வதேச ரீதியாக புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் நமது ராஜதந்திரிகள் சிறப்புரிமையை அனுபவிப்பது போல் நாட்டின் நலனை கவனிக்கவில்லையென்றும் கூறுகின்றனர்.
 எதிர்காலத்தில் முப்படைகளும் உசார் நிலையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார் ஆயர் போன்ற விஷ பாம்புகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் சில்லறை கடை அல்ல மிக பலம் வாய்ந்த அமைப்பு அது புலிகள் தடையை நீக்கிய சம்பவம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி என்று இக்கட்சியின் நிறைவேற்று அதிகாரி டி.விதானகே குறிப்பிடுகின்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

1 கருத்துகள்:

  1. இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி-
    இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து ஈழபோராளிகள் என்ற பெயாில் இயங்கும் சிறு கிறிஸ்தவ குழுக்கள் இலங்கையில் தமிழர்களை கொலை செய்து கொள்ளையடித்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார்.பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் நிறைவேற்று அதிகாரி டி.விதானகே தெரிவித்தார்.மேலதிக விபரங்களுக்கு டி.விதானகே தொடா்பு கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு