சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளாக மடுவிற்கு வருகைதந்திருந்த அருட்பணியாளர்கள் மென்சின்நோர் லேனாட் டீ முருகோ, மொன்டினியோ அன்ரனியோ அமராத்தி ஆகிய அடிகளாருடன் நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் திருவிழா திருப்பலியில் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவின் போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மறை மாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கும் பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக அன்னையின் பரிந்துரையை வேண்டி வழங்கும் ஆசியுரையை திருச்சபையின் தாய் மொழியாம் இலத்தீனில் மொழிந்தார். இத்திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதன் பின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருச்சுரூப ஆசிரும் அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து, உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், நீதிமன்ற ஒழுங்கு போன்ற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருச்சுருப ஆசீர் நிறைவுற்றதும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையும் இலங்கைக்கு வருகைதரவிருக்கும் பரிசுத்த பாப்பரசரின் கொழும்பு, மடு ஆகிய விஜயங்களின்போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூடியிருந்த மக்களுக்குத் தெரிவித்தனர். இவ்விழாவுக்கு இம்முறை நாட்டின் பலபாகங்களிலுமிருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என மடு பரிபாலகர் வட்டம் தெரிவித்தது.
 

 

திங்கள், 28 ஜூலை, 2014

கிறிஸ்துவ மதத்தை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கதறும் பிஷப் (காணோளி, )

                                                   
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி என அறிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு குடியிருக்கும் ஏராளாமான மக்களை இந்த அமைப்பினர் சமீபத்தில் கொன்று குவித்தது உலக நாடுகளை கதி கலங்க செய்துள்ளது. தற்போது அங்கு உள்ள கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது 'ஜிஷியா' வரி கொடுக்க வேண்டும் என கடந்த 19ம் திகதி அல்பாக்தாதி அறிவித்து, ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தார். இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர்.மேலும் பலர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை பூட்டி விட்டு, பத்திரமான இடங்களுக்கு வெளியேறியதால் பல தேவாலயங்களில் வழிபாடே நடைபெறவில்லை. இதுகுறித்து, பாக்தாத் நகரில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த ஆங்கிலிகன் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தலைவரித்தாடுகிறது என்றும் இதனால் ஈராக்கில் கிறிஸ்துவ மதம் அழிந்து வருகிறது எனவும் கூறியுள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொசூல் நகரில் இருந்த 5,000 கிறிஸ்துவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 17 ஜூலை, 2014

முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம்


தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்!   
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   தமிழ் சிவில் சமூக அமையத்தினர் கடந்த ஜூலை 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியரி ந்யுகேன் வான் டாட் (Archbishop Pierre Nguyen Van Tot) ஐ சந்தித்து புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பாக கலந்துரையாடிமையோடு இவ்விடயம் தொடர்பில் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றையும் வத்திக்கான் பிரதிநிதி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் விஜயம் அரசாங்கத்தால் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி தமிழ் சிவில் சமூக அமையத்தினர் பாப்பரசரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாப்பரசரின் விஜயம் அரசுக்கு சார்பாக மாற்றப்படுவதை முறியடிப்பதற்காக பாப்பரசர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் - குறிப்பாக முடிந்தால் முள்ளிவாய்க்கால் அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி ஒன்றை பாப்பரசர் நடத்த வேண்டும் என்றும் - தமிழ் சிவில் சமூக அமைய உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கும் போது தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டுமெனவும் சிவில் சமூக அமையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையில் இவ்வேண்டுகோளை விடுக்கவில்லை என தெளிவுபடுத்தியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையத்தினர், எனினும் பாப்பரசர் இவ்விடயங்களைப் பற்றி இலங்கை ஜனாதிபதியிடம் பேசுவது இவ்விடயங்களுக்கு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்பதாலேயே தாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றனர் எனவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மற்றைய செய்திகள்

வியாழன், 26 ஜூன், 2014

தேவதைக்கு முத்தமிட்ட போப் (காணொளி இணைப்பு)

popc
 சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார். இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார். அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன் சாலையில் போப் வருவதை பார்த்தவுடன் அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்ததை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார். மேலும், அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார். மாபியா கும்பலால் போப்பிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளபோதும், அதைப் பொருட்படுத்தாமல் எவ்வித பயமுமின்றி போப், சாலையோரம் நின்றிருந்த அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
  மற்றைய செய்திகள்.புகைப்படங்கள்.




சனி, 14 ஜூன், 2014

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது 04ம் திகதி புதன்கிழமை ஆரம்பமானதுடன் ஒன்பது தினங்கள் ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொருப பவனியும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
 
குரு முதல்வர் அருட்தந்தை மொறாயஸ் தலைமையில் பூசைகள் நடைபெற்று இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த பவனியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
 
நேற்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கிறைஸ்டன் அவுஸ்கோன் தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை கலந்துகொண்டு கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
 
இதனைத்தொடர்ந்து பல்வேறு நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்களும் வழங்கப்பட்டன.
உற்சவத்தின்போது ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆயரினால் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்ட பகுதியில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மேள தாளங்கள் முழங்க கொடியிறக்கும் செய்யப்பட்டது.
இறுதி உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்







 

புகைப்படங்கள்இணைப்பு

செவ்வாய், 10 ஜூன், 2014

நெஞ்சம் மறக்குதில்லை ....!

mmmm
உன்னை
 பிரிந்து பல வருடங்கள்
 ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
 நொடிகூட என்னிடம்
 இல்லை ....!!!
சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்
என் இதயத்தில்
 உன்னை அடைகாக்கிறேன்
 காதல் கிளிகள் சிறகடித்து
 பறக்கின்றன
 

திங்கள், 9 ஜூன், 2014

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத்


ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.