வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் நிகழ்வு 50வது திரு,திருமதி, தியாகராஜா. 28.02.15

DSC_0253
50வது பிறந்தநாள் நிகழ்வு 28-02.2015 -தனது அம்பதாவது வருட பிறந்தநாளை யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர் நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை 
சுவிஸ் சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து நவக்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவற்கிரி உறவு இணையங்களும், http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம் பிறந்தநாள் கொண்டாட்ட நிழல் படங்கள் இணைப்பு
. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> DSC_0187 DSC_0178 DSC_0185 DSC_0186 DSC_0182 DSC_0181 DSC_0183 DSC_0184 DSC_0188 DSC_0192 DSC_0191 <a href=" http:="" jpg="" uploads="" width="500" wp-content="" www.nilavarai.com="" />DSC_0190
DSC_0189 DSC_0179 DSC_0176 (1) DSC_0176 DSC_0193 DSC_0197 DSC_0204 DSC_0209 DSC_0206 DSC_0205 DSC_0210 DSC_0213 DSC_0221 DSC_0220 DSC_0219 DSC_0218 DSC_0222 DSC_0228 DSC_0233 DSC_0243 DSC_0242 DSC_0241 DSC_0237 DSC_0244 DSC_0245 DSC_0251 DSC_0254 DSC_0255 DSC_0256 DSC_0263 DSC_0260 DSC_0259 DSC_0257 DSC_0270 DSC_0267 DSC_0265 DSC_0264

திங்கள், 13 ஜூலை, 2015

கலீலீ தேவாலயம் தேவாலயத்தை தாக்கியவர்கள் கைது:

இஸ்ரேலின் கலீலீ கடற்கரைப் பகுதியில் உள்ள தேவாலய வளாகம் ஒன்றுக்கு கடந்த மாதம் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
கலீலீ தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமானது என்று கருதப்படுகிறது அந்த இடத்திலேயே இயேசுபிரான் சில ரொட்டித் துண்டுகள் மற்றும் மீன்களை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு 
உணவளித்தார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அந்த வளாகத்தில் சேதப்படுத்த தேவாலயக் கட்டிடம் ஒன்றில் "போலிக் 
கடவுகள்களின்" வழிபாட்டைக் கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஹீப்ரூ மொழியில் அந்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் அவை யூத தீவிரவாதிகளால் செய்யப்பட்டிருக்லாம் எனக் 
கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 23 ஏப்ரல், 2015

கதற கதற கன்னியாஸ்திரியை கற்பழித்த காமுகன்கள்!!!

 தென்னாப்பிரிக்காவில் 86 வயது கன்னியாஸ்திரியை கும்பல் ஒன்று கற்பழித்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிகாவின் இக்சோப்போ(Ixopo) நகரில் உள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்(Checkerd Hard Convent), ஆஸ்திரியா(Austria) நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் சிலர் தங்கியிருந்தனர்.
இங்கு கடந்த 19ம் திகதி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த கெர்ட்ரட் டிய்பென்பேச்சர்(Gertrud Tiefenbacher Age-86)  என்ற கன்னியாஸ்திரியின் கை, கால்களை கட்டிப் போட்டனர்.
இதன்பின் அவரை வெறித்தனமாய் கற்பழித்த அந்த கும்பல், அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த செய்தியை உள்ளூர் ஊடகங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இயேசுக் கிறிஸ்து அதிசய குழந்தை!! சிலுவை காயங்களுடன்

இயேசுக் கிறிஸ்து அதிசய குழந்தை!! சிலுவை காயங்களுடன்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் சிலுவை காயங்களுடன் பிறந்திருப்பது
 பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸின் குவென்சன் நகரில் கடந்த மார்ச் 15ஆம் திகதி குழந்தை ஒன்று கைகள் மற்றும் பாதங்களில் தழும்புகளுடன் பிறந்தது.
இந்த தழும்புகளை உற்று கவனித்த போது அது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த போது இருந்த தழும்புகளை ஒத்ததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தோடு குழந்தையின் நெற்றியிலும் முள், கிரீடம் வைக்கப்பட்டிருந்தது போலான தழும்பு காணப்பட்டது.
இந்த செய்தி மருத்துவமனை எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி அறிந்த கிறிஸ்தவர்கள் சிலர் இந்த குழந்தை இயேசு கிறிஸ்துவின் அடுத்த பிறவி என்று குறிப்பிட்டனர். சிறுது நேரத்தில், குவென்சென் நகரம் முழுவதும் இந்த செய்தி பரவியது.

இதனை அடுத்து, கிறிஸ்துவ நம்பிக்கையாளர்கள் பலர் ஒன்று திரண்டு, ஜெஹோமர் கேஸ்டெலியோ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய குழந்தையை வந்து பார்த்தனர்.
மேலும், 1000க் கணக்கானோர் மருத்துவமனையில் குழுமி, பூமிக்கு மீண்டும் வந்ததற்கு நன்றி என்றும், வருக ஜெஹோமர் என்றும் கூறி பிரார்த்தனைகள் செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்த அதிசயக் குழந்தை குறித்து பல கருத்துக்கள் உலவத் தொடங்கின. இந்த குழந்தை இயேசுவின் அவதாரம் என்று ஒரு சாரரும், இந்த குழந்தையை இயேசுதான் அனுப்பினார் என்றும், தன்னை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த தழும்புகளை வைத்திருப்பதாக ஒரு சாரரும் கூறினர்.இது குறித்து,மருத்துவர், மெர்லின் குரூஸ் கூறுகையில்,

குழந்தை பிறக்கும் போதே புர்புரா  என்ற ஒருவகை குறைபாட்டுடன் பிறந்ததாக தெரிவித்தார்.
இந்த உடலில் உள்ள இரத்தம் ரத்த நாளங்களில் இருந்து வெளியேறி தோல் வழியாக வெளியில் தெரிவது தான் இந்த புர்புரா என்றும ஆனால் இந்த குழந்தை விஷயத்தில் அது எப்படி சரியாக, கைகள், பாதங்கள் மற்றும் நெற்றியில் சரியாக அமைந்தது என்பது விசித்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே வேளை குழந்தையை உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தெய்வீகக் குழந்தையாகவே பார்க்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 26 ஜனவரி, 2015

தமிழர் முன்னேற்றக் கழக பிரதிநிதிகள் ஆயர் சந்திப்பு.!!

தமிழர் முன்னேற்றக் கழகம் கடந்த 2015-01-21ந் திகதியன்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துகுரிய இராஜப்பு ஜோசப் அவர்களுடன் தமிழ் மக்களின் கலை, கலாசார, அரசியல் இமற்றும் வாழ்வாதார உரிமைகள் பற்றிய கலந்துரையாடலொன்றை மேற்க்கொண்டிருந்தது.
குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளர் வி.ஜனகனால் ஆயருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இக் கலந்துரையாடலில் பிரதானமாக இரண்டு விடயங்கள் கலந்தலோசிக்கப்பட்டன. முதலாவதாக போருக்குப் பின்னரான குறித்த 5 வருட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம், மனோநிலை என்பன மீள் கட்டி எழுப்பபட வேண்டியதாகும் அனால் குறித்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நலத் திட்டங்களோ. விழிப்புணர்வு நடவடிக்கைகளோ இதுவரையில் குறித்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
தமிழர் முன்னேற்றக் கழகமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற போரினால் பாதிப்படைந்த பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமங்கள் தோறும் சென்று அவ் மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடி இஅவ மக்கள் எப்போதும் பிறரின் உதவியினை எதிர்பார்த்து கையேந்தும் நிலைமையிலிருந்து மீட்சியடைந்து.
தங்களைத் தாங்களே சுயமாக முன்னேற்றிக் கொள்வதன் மூலமாக நல்லொதொரு முன்னேற்றத்தை அடையக் கூடிய திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி இஅவற்றைத் தொடர்ச்சியாக செயற்படுத்த குறித்த கிராமங்களில் கிராமிய அமைப்பொன்றை உருவாக்கி அவ்வூரில் உள்ள மக்களையே அதன் செயற்பாட்டாளர்களாக நியமித்து அவர்களின் மேம்பட்டுக்காக கை கொடுத்து வருகின்றது.
மேலும் குறித்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு கை கொடுப்பதன் மூலம் அவ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் இதனடிப்படையில் 100 000 மாணவர்களின் கல்விக்கு கைகொடுப்போம் என்ற தமிழர் முன்னேற்றக் கழகத்தின் 2015 ஆம் ஆண்டின் கருத்திட்டத்திற்கமைவாக இகுறித்த மாவட்டங்களில் உள்ள 2500 மாணவர்களிற்கு அப்பியாசக் கொப்பிகள்
 முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
தமிழர் முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்திட்டங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடுகையில் அண்மையில் தைப்பொங்கல் தினத்தன்று 15-01-2015 அன்று வெலிக்கடை இவெலிக்கடை -மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை
 மேற்கொண்டிருந்ததோடு அவர்களின் விடுதலை தொடர்பாக பிரதான அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் சந்திரரத்தின பள்ளேகம உட்பட்ட முக்கியமான அலுவலர்களிடம் இகைதிகளின் விடுதலை தொடர்பில் இரு கோரிக்கைகளை முன் வைத்திருந்தது.
முதலாவதாக அரசியலமைப்பின் உறுப்புரை 34 இன் பிரகாரம் பொது மன்னிப்பு அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி ஒரு வருடத்திற்குட்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கையின் மூலமாக குறித்த கைதிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தீர்வொன்றை குறித்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பதனை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக ஆயர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்தோடு குறித்த கைதிகளின் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதோடு தமிழர் முன்னேற்றக் கழகம் குறித்த கைதிகள் தொடர்பாக எடுத்துள்ள இஎடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஒரு விசேட கையேடு ஒன்றும் ஆயர் அவர்களிடம் திரு.வி ஜனகன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் ஆயர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் பகிரங்கமாக குரல் கொடுத்ததாகவும் தொடர்ச்சியாக தான் அதனைச் செய்யவுள்ளதாகவும் தன்னாலான பாரிய பங்களிப்பு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளில் பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு தமிழர்களுக்கான உரிமைகளையும் இஉதவிகளையும் பெற்றுகொள்ள அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அமைப்பொன்று காலத்தின் தேவையாகவுள்ள தென்றும் குறித்த மக்களின் பிரச்சனை தேவைகள் தொடர்பாக மற்றைய பிரதேசங்களில் உள்ள மக்களிடமும் அரசாங்கத்திடமும் சர்வதேச அரங்கில்
 வேறு மொழி பேசும் மக்களிடமோ குறித்த விடயங்களை சரியாகத் தெளிவுபடுத்த சரியான தலைவரொருவர் குறித்த மக்களுக்கு இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தினையும் அப்படியானதொரு தலைவர் காலத்தின் தேவையெனவும் ஆயர் அவர்கள் தமிழர் முன்னேற்றக் கழக பிரதான அமைப்பாளரிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக உரிய தரப்பினருக்கும் மக்களுக்கும் இடையில் சந்திப்புகளை மேற்கொண்டு தெளிவுபடுத்தவுள்ளதோடு தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமூக நல செயற்பாடுகளுக்கும் தனது ஒத்துழைப்பினையும் ஆசிர்வாதத்தினையும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>