வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக மூடுமாறு !!


கேமரூன் நாட்டில் 50 தேவாலயங்கள் மட்டுமே முறையான அனுமதியினை பெற்ற போதிலும் 500 தேவாலயங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். இதற்கு பதிலளித்த பாதிரியார் குறித்த சிறுமியின் உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்விளைவாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பையே இது போன்ற நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளன என்று அதிபர் பால் பியா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சிப்பதால் தான் பியா தங்களது தேவாலயங்களை மூட நினைக்கிறார் என்று அம்மத போதகர்கள் கூறுகின்றனர்.
அதிபர் பியா ராணுவத்தின் துணையுடன் தலைநகர் யாவுண்டே, வடமேற்கு பகுதியின் தலைநகரான பமென்டா பகுதிகளில் உள்ள பெந்தெகொஸ்தே ஆலயங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். பமென்டாவில்தான் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் மற்ற எட்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை மூடும் நடவடிக்கையில் அரசு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் இத்தகைய மதகுருமார்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இவர்கள் தங்களின் அதிகாரத்தை மீறுகின்றார்கள் என்று பமென்டாவில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் மபு அந்தோணி லங் தெரிவித்துள்ளார்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மெஸ்ஸையா என்ற பெயரை சூட்ட தடைவிதித்தது அமெரிக்க!

!

அமெரிக்காவில் மெஸ்ஸையா (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான மீட்பர் இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
   
ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வருடத்தில் அமெரிக்காவில் 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு மெஸ்ஸையா என்று பெயரிடப்பட்டது. இயேசுவை, கிறிஸ்தவம் மெஸ்ஸையா என்று கூறும் அதேவேளை, யூத மதம் அதனை யூதர்களின் மீட்பர் என்ற பொருள்படப் பயன்படுத்துகிறது. மீட்பர் அல்லது விடுவிப்பவர் என்ற அர்த்தத்தை இந்தச் சொல்லுக்கு அகராதிகள் கூறுகின்றன.
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேவலார் அன்னையின் பெருவிழா

                                 கேவலார் அன்னையின் பெருவிழா 10.08.2013

புதன், 24 ஜூலை, 2013

முக்கிய பதவியில் ஓரினச்சேர்க்கையாளரை அமர்த்திய போப்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மதகுரு ஒருவருக்கு வத்திக்கானில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் வாராந்த சஞ்சிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
பட்டிஸ்டா றிக்கா எனும் குறித்த மதகுரு உருகுவேயிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் பணிபுரியும்போது சுவிஸ் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவ்வாறான ஒருவரை வத்திக்கானில் முக்கிய பதவியில் அமர்ததுவது அவமானம் எனவும் அச்சஞ்சிகை மேலும் சாடியுள்ளது.
இதேவேளை வேறு பலருடனும் தவறான உறவுகள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் பட்டிஸ்டாவை குறித்த பதவியில் போப் பிரான்ஸிஸே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வியாழன், 27 ஜூன், 2013

இயேசுவின் அன்பின் ஆழம்


 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில் சிக்கிய ஓட்டை படகுபோலும், நெருப்புக்குள் சிக்கிய பஞ்சைப்போலும், தன் வாழ்க்கை பயணத்தை தொடருகிறார்கள்
 என் அன்பை புரிந்து கொள்வதற்கு ஒருவருமில்லை என்று எண்ணி தன்னைத்தானே சமாதியாக்கிகொண்டு கண்ணீர் பூக்களால் அலங்கரித்துக் கொண்டும், வாழ்க்கை என்னும் எரிமலை குழம்புகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு உலகம் தரும் பதில் ஆண்கள் அழுகக்கூடாது பெண்கள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டும் என்ற நுகத்தைப்போட்டு வாழ்க்கை என்ற மாட்டுவண்டியில் போய்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கானல் நீரைப்போல வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றிலும் மாறுப்பட்ட ஒரு உண்மையான அன்பு இருக்கிறதென்பதை இந்த மானிடம் அறியவில்லை, அதை உணர்ந்தும் கொள்ளுவதுமில்லை.
தாயின் அடிவயிற்று பாசத்தைவிட தந்தையின் தோள்களை விட, உறவுகளை விட, நட்பை விட, தூய்மையான மாசற்ற அன்பு அதுதான் “இயேசுவின் அன்பு”
தாயின் கருவிலே எலும்புகள் உருவாகும் முன்னே உன்னை தெரிந்து கொண்டு, உள்ளங்கைகளில் உன்னை வரைந்து உலகம் என்னும் இருட்டிலே உன்னை நட்சத்திரமாக வைத்திருக்கிறார் இதுதான் “இயேசுவின் அன்பு”. இந்த அன்பை புரிந்துகொள்ளாமல் நீ எட்டி உதைத்த நாட்களிலும்;, கசக்கிவீசப்பட்ட காகித மலராய் அவர் அன்பை நீ தூக்கி வீசும் போதும், பாவமென்ற புதைச்சேற்றில் நீ சிக்கி மூச்சு திணறும்போதும் உன்னை நேசித்த பரம தகப்பன் அவர்.
பாவமென்ற உலக சந்தையில் நீ அடிமையாய் போனபோது, செக்குமாட்டைப்போல உன் வாழ்க்கை சுற்றிக்கொண்டு உனக்குள் அழுதுகொண்டிருக்கும் போது, என் பிள்ளையை எப்படி மீட்டெடுப்பேன் என்று தனக்குள் கதறின உள்ளம்தான் இயேசு. உன்னை மீட்டெடுக்கிறதற்கு விலைகிரயம் இருக்கும் என்பதை அறிந்து உலகம் என்ற பாவ சந்தையில் உன்பாவக்கறையைப்போக்க தன் இரத்தினால் கழுவினார். உள்ளங்கைகளில் வரைந்த உன்னை மீட்டெடுப்பதற்கு தன் உள்ளங்கைளையே கொடுத்தார். அந்த உள்ளங்கையையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்?
மனிதன் வானத்து நட்சத்திரங்களையும், கோள்களையும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம், ஆகியவற்றை அளவிட அவனால் முடிகிறது. ஆனால் இயேசுவின் உள்ளங்கையின் அன்பின் ஆழத்தை அறிந்தவர் யார்? சிலர் நெருங்குகிறார்கள், சிலர் விலகுகிறார்கள், சிலர் ஏங்குகிறார்கள் ஆனால்
 இயேசு கூறியதோ:
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் .16
எனக்கன்பான சகோதரனே சகோதரியே, நீ ஏன் பாவம் என்ற நுகத்தடியோடு அடிமையைப்போல வாழவேண்டும்? ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்து உனக்காக மரித்தார். அவர் உன்னை அழைக்கிறார். இன்றைக்கே அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து அவருடைய மகனாக மகளாக மாறிவிடு. அவருக்காக உன்னுடைய இருதயத்தைக் கொடு இதோ உன் வாசற்படியில் நின்று உன் இதயக்கதவைத் தட்டிக் கொன்டிருக்கிறார் அவரை வா என்று அழைத்தால் உன் வாழ்வில் வந்து உன்னை அதிசயங்களைக் கானச்செய்வார். அவரை வா என்று இப்போதே அழைப்பாயா?
ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நம் அனைவருடைய பாவங்களையும் நீக்கி நம்மை சுத்தீகரிக்கும் (1யோவான்1;7) என்று வேதம் சொல்லுகிறது
 இயேசு உன்னிடத்தில் கேட்கிறார்:
என் அன்பு குழந்தையே
 நான் எதிர்க்கவுமில்லை,
நான் பின்வாங்கவுமில்லை.
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும்,
தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்;
அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
நான் இன்னும் உன்னை நேசிக்க என்ன செய்யவேண்டும்

இயேசுவின் நேசம் இன்பமானது

 
 உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது.
பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி அவருடைய சிரசிலிருந்து பாதம் வரையிலான காயங்களிலிருந்து வடிந்து வந்தது.
இயேசு இந்த பூமிக்கு ஏன் வந்தார்? கலங்கிய கண்களோடும், உடைந்த உள்ளத்தோடும் வாழும் மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி வந்தார். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,
ஏசாயா 61 :
 1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
2. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
3. சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
உன்னதப்பாட்டு 1 : 2. இயேசுவின் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது

வியாழன், 20 ஜூன், 2013

மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!



     கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்.
மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!,,,,கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர்
லூர்து மாதா தேவாலயத்திற்குள் 1,4m அளவிற்கு வெள்ளம் பாய்ந்த வண்ணம் உள்ளது. புனிதக் குளியல் குளிக்கும் இடம் முழுவதும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. மேலேலுயுள்ள தேவாலயம் பூட்டப்பட்டுள்ளது. கடந்த வருடமும் பாரிய வெள்ளத்திற்கு இப்பகுதியும் தேவாலயமும் சிக்கிப் பெருஞ் சேதம் ஏற்பட்டிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு இறைவன் கூட தப்ப முடியாது என்பதையே இது காட்டுகின்றது.