புதன், 24 டிசம்பர், 2014

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!–


பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.
பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 நவம்பர், 2014

தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்!

பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 நவம்பர், 2014

ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை! பாப்பரசரின் விஜயம்

 புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை கூறினார்.
உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் -

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள் முறையாக செயல்படாமை இதற்கு காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் நமது நாட்டிற்கு ஆபத்தாகிவரும் வேளையில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. நாம் ஆயுத ரீதியாக புலிகளை அழித்திருந்தாலும் சர்வதேச ரீதியாக புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் நமது ராஜதந்திரிகள் சிறப்புரிமையை அனுபவிப்பது போல் நாட்டின் நலனை கவனிக்கவில்லையென்றும் கூறுகின்றனர்.
 எதிர்காலத்தில் முப்படைகளும் உசார் நிலையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார் ஆயர் போன்ற விஷ பாம்புகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் சில்லறை கடை அல்ல மிக பலம் வாய்ந்த அமைப்பு அது புலிகள் தடையை நீக்கிய சம்பவம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி என்று இக்கட்சியின் நிறைவேற்று அதிகாரி டி.விதானகே குறிப்பிடுகின்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மன்னார் ஆயர் வடமாகாணசபை தொடர்பில் அதிருப்தி!

பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள் காணியற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களின் நிலை குறித்து தாம் விரிவாக முதலமைச்சருடன் பேசியதாக ஆயர் கூறினார்.
அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவேண்டும் என்று தாம் அவரிடம் கோரியதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.
எனினும் சுமார் ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் வடமாகாணசபை தொடர்பிலான மக்களது கவலைகளையே ஆயர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புனித பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸ் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு!!

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார்.

இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாப்பரசரின் இலங்கைப் பயணம் நீதியையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக உழைப்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசருடனான சந்திப்பில், மகிந்த தம்பதிகளுடன், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியுறவு அமைச்சின் கண்காணிப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுபினர் சஜின் வாஸ் குணவரதன, எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் கத்தோலிக்க அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு