வெள்ளி, 16 ஜனவரி, 2015

பாப்பரசர் சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு!

இலங்­கைக்கு நேற்று வந்­த­டைந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்தை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்டபத்தில் இலங்­கையின் சர்­வ­மத தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலை­வர்கள் பாப்­ப­ர­ச­ரு­ட­னான இந்த சந்­திப்பில் கலந்­து­ கொண்­டனர்.

மாநாட்டு மண்­ட­பத்­துக்கு வந்த பாப்­ப­ர­சரை மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு அழைத்துச் சென்றார். பாப்­ப­ர­ச­ருக்கு செங்­க­ம்­பள வர­வேற்­ப­ளிக்­கப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்டார். அத்­துடன் நிகழ்வில் இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள் உரை­யாற்றி முடிந்­ததும் பாப்­ப­ர­ச­ருக்கு பொன்­னாடை போர்த்தி கௌர­வித்தார். நாட்டின் அனைத்து மதங்­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் இந்த சர்­வ­மத மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். முதலில் பௌத்த மதத்தின் சார்பில் கம்­பு­று­க­முவே வஜிர தேரர் உரை­யாற்­றினார்.

இந்து மதத்தின் சார்பில் உரை­யாற்­றிய சிவ­சிறி மகா­தேவ குருக்கள், இலங்கை தாய்­தி­ரு­நாட்­டுக்கு பாப்­ப­ரசர் வருகை தந்­ததன் மூலம் பாரிய மகிழ்ச்சி ஏற்பட்­டுள்­ளது என்றும் உங்கள் வருகை இந்த நாட்­டுக்கு சமா­தா­னத்­தை­யும் அமை­தி­யையும் கொண்­டு ­வ­ரட்டும். நீங்கள் உலக சமா­தான தூது­வ­ராக வந்­துள்­ளமை மகிழ்ச­சி­ய­ளிக்கும் விட­ய­மாகும். எனவே உங்­க­ளுக்கு நன்றி கூறி வாழ்த்­து­வ­துடன் பல்­லாண்­டு­காலம் வாழ வாழ்த்­து­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் சம­யத்தின் சார்பில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையின் ஊடக பிரிவின் செய­லாளர் அஷ் ஷெய்யிக் பாசில் பாரூக் உரை­யாற்­று­கையில், அண்­மையில் பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்­களில் இடம்­பெற்ற தாக்­குதல் நட­வ­டிக்­கை­களை நாங்கள் எதிர்க்­கின்றோம். இஸ்லாம் மதம் அன்பை போதிக்­கின்­றது. எனவெ இந்த இடத்தில் ஒரு கோரிக்­கையை விடுக்­கின்றேன். அதா­வது மத தலை­வர்கள் ஒன்­றி­ணைய­ வேண்டும் என்று இந்த இடத்தில் கோரு­கின்றோம். நாம் ஒவ்­வொ­ரு­வரும் எமது நம்­பிக்­கை­களை புரிந்­து­ கொள்­ள ­வேண்டும். அந்த வகையில் பாப்­ப­ர­சரின் இலங்கை விஜ­ய­மா­னது இந்த நாட்டின் ஒரு உறவுப் பால­மா­கவும் சக­வாழ்­வுக்­கான விட­ய­மா­க­வும் அமையும் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார். மேலும் அங்­லிக்கன் திருச்­ச­பையின் பேரா­யரும் இந்த நிகழ்வில் உரை­யாற்­றினார்.

அந்த சந்திப்பையடுத்து பாப்பரசரின் நேற்றைய நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. பாப்பரசர் வத்திக்கான் தூதரக இல்லத்தில் நேற்று இரவு தங்கினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 13 ஜனவரி, 2015

மடுத் திருத்தலத்தில் பாப்பரசரைத் தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார். பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர். இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து விமானப் படையின் ஹெலிகொப்டரில் மடுத் திருத்தலத்துக்கு வரும் பாப்பரசர் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மடுமாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்குகொண்டு
 மக்களுக்கு இறை ஆசிவழங்குவார். இதன்போது சிறுவர், சிறுமிகள், இளைஞர், யுவதிகள், குருக்கள், அருட்சகோதரிகள், கத்தோலிக்க மக்கள், கத்தோலிக்கர் அல்லாத மக்கள், போரினால் உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் காணாமற்போனோரின் உறவுகளையும் 
பாப்பரசர் சந்திப்பார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 1 ஜனவரி, 2015

மலரும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2015

 களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இணைய வாழ்த்துக்கள்
1.01.2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.
மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி நியூ இயர் வாழ்த்துக்கள்
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அணைவரையும் வாழ்தி நிற்கிறது  இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த
. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 டிசம்பர், 2014

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!–


பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு பொருத்தமானது என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது.
பேராயர் சபையில் அங்கம் வகிக்கும் பல பேராயர்களின் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.
சில அரசியல்வாதிகள் பாப்பாண்டவரின் படத்தை ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 நவம்பர், 2014

தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்!

பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 நவம்பர், 2014

ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை! பாப்பரசரின் விஜயம்

 புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை கூறினார்.
உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>