ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என


ஈஸ்டர் ஸ்பெஷல் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன.
கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார்.
அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார்.
கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர்.
மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான், போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள்.
அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர்.
அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி,"அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்'' என்றார்.
பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.

தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர், தோமாவோ இதை நம்பவில்லை.
அப்போது இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி “சந்தேகப்படாதே” என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார்.
அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி,"கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று கூறினார்.
அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்.

ஈஸ்டர் முட்டை
முட்டையானது ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் கருதப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
ஈஸ்டர் விழா அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.

அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது.
ஆனால் தற்கால வழக்கில் சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

போப் ஆண்டவர் 12 பேரின் காலை கழுவி முத்தமிட்டர்


 வாடிகனில் நடந்த புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டுள்ளார்.
உலகமெங்கும் இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது(இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாள்).
சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார்.
தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.
புனித வெள்ளிக்கு முந்தைய நாளை புனித வியாழன் ஆக கிறிஸ்தவர்களை கடை பிடித்து வழிபாடு செய்கின்றனர்.
இதனையடுத்து நேற்று புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சி வாடிகன் நகரில் நடந்தது.
அதில் போப் ஆண்டவர் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார், அப்போது எண்ணையை புனிதப் படுத்தும் சடங்கு நடந்தது.
அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.
அப்போது போப் ஆண்டவர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என கூறினார்.
மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மையத்ததுக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார்.
அவ்வாறு கால்களை கழுவியவர்கள் 16 முதல் 86 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 4 பேர் பெண்கள், 75 வயது ஹமீது என்ற முஸ்லீம் நபர் ஒருவர்.
இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.
அப்போது 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார்.
ஆனால், புதிய போப் ஆண்டவராக பதவியேற்றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மையத்துக்கு சென்றுள்ளார்.
  
 


சனி, 5 ஏப்ரல், 2014

இயேசுவின் கதை ..

மிகவும் அட்புபுதமன எம்ஆண்டவர் இயேசுவின் சிறந்த தமிழ் மொழி காணோளி இணைப்பு...

சனி, 15 மார்ச், 2014

கச்சதீவுக்கான பயண ஒழுங்கு இன்று முதல்

 கச்சதீவு புனித அந்தோனியார்  ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்று தொடக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளன.   கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் அந்ததந்தப் பகுதிகளில் இருந்து ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.   இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம்  ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து  இடம்பெறும்.   திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 14 மார்ச், 2014

நாளை ஆரம்பம்கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா


இந்திய- இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை கச்சதீவு திருவிழாவிற்காக தமிழகத்திலிருந்து பங்கு கொள்ள 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இமேஸ்வரம் தீவிலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்ப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது.

1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சதீவு விழா நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இலங்கையில் உள்நாட்டு போர் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2002 இல் மீண்டும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கச்சதீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 95 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் 2,972 ஆண்கள், 347 பெண்கள், 141 குழந்தைகள் என மொத்தம் 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் படகு உரிமையாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சதீவு திருவிழாவிற்கு பயணிக்க முடியாது.

வியாழன், 13 மார்ச், 2014

உற்சவத்தில் 3500 இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்:

 கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த திருவிழாவில் 3500 இந்திய கத்தோலிக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள 3500 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விண்ணப்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களுடன் இலங்கையை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களும் பெருமளவில் தேவாலய உற்சவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கச்சதீவில் நடைபெறும் வருடந்த உற்சவத்திற்கு தேவையான சகல வசதிகளையும் கடற்படையினர் வழங்க உள்ளனர்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

மருத்துவமனையில் சுற்றித் திரியும் பேய்……


அதிசயம்ஆனால் இதை நீகள்தான் தீர்மாணிக்கவேண்டும்
இதோ சுற்றித் திரியும் பேய் மருத்துவமனையில் …காணோளி…